Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil)  01-03-2021

இன்றைய தியானம்(Tamil)  01-03-2021

கட்டும் கர்த்தாவே 

“...ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான்.” – 1கொரி.3:14

ஒரு கட்டிட இஞ்ஜினியர் ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அதன் முதலாளி இந்த Engineer ஓய்வு பெற்று செல்லுவதற்கு முன்பாக ஒரு கட்டிடத்தை கட்டி கொடுக்கும்படி சொன்னார். நாம்தான் வேலையை விட்டு நிற்கப் போகிறோமே என மிகவும் அஜாக்கிரதையாக எப்படியாகிலும் கட்டிக்கொடுத்தால் போதும் என்று கவனமில்லாமல் கட்டிடப் பொருட்களை வாங்கிக் கொடுப்பதிலும், வேலையாட்களை சரியாக கண்காணியாமலும் கடனே என்று பொறுப்பில்லாமல் கட்டி முடித்தார். அதை கட்டி முடித்து முதலாளியிடம் ஒப்படைத்தார். முதலாளி ஓய்வில் செல்லுகிற உங்களுக்கு நான் கொடுக்கும் பரிசு இது என அவரிடம் சாவியை ஒப்படைத்தார். இதைக் கேட்ட அவருக்கு தூக்கிவாரி போட்டது. இந்த வீடு நமக்கு கிடைக்கும் என்று தெரிந்திருந்தால் நான் எவ்வளவு அழகாக, நேர்த்தியாக, கவனமாக கட்டியிருப்பேனே! தரமான பொருட்களை பயன்படுத்தி, வேலையாட்களை நன்கு கண்காணித்து சிறப்பாய் செய்திருப்பேனே என்று கவலைப்பட்டார். 

இதேப் போன்றுதான் நாமும் இவ்வுலகில் நம் குடும்பங்களை,  உறவுகளை கட்டிக் கொண்டிருக்கிறோம்.  நாம் எப்படி கட்டுகிறோம் என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்க்க அழைக்கப்படுகிறோம். நம் கட்டிடத்தின் அஸ்திபாரம் அன்புதான். குடும்பத்தில் உறவுகளைக் கட்ட வேண்டும், நட்பைக் கட்ட வேண்டும், வேலை பார்க்கிற இடத்தில் பொறுப்புகளை சுமந்து நம்பிக்கையைக் கட்ட வேண்டும். அநேக நேரங்களில் நம் குடும்ப வாழ்க்கையை ஏனோ தானோவென்று கட்டிக் கொண்டிருக்கிறோம். வெந்ததை தின்று, வெறுமனே வாழ்ந்து, விதி வந்தால் சாவோம் என்று வாழ்ந்து கொண்டிருந்தால் கர்த்தர் நம்மை பார்த்து வேதனைப்படுவார். எனவே நாம் வாழ்கிற வாழ்க்கை அர்த்தமுள்ள வாழ்க்கையாக வாழ்ந்து முடிக்க வேண்டும். ஒரே ஒரு வாழ்க்கை அதுவும் சீக்கிரம் கடந்து போகும். கிறிஸ்துவுக்காக எதை செய்தோமோ அது மாத்திரமே நிலைத்து நிற்கும். எனவே நாம் கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின்பற்றுகிறவர்களாக வாழ்ந்து காட்டுவோம்.

1கொரி.3:10-13ல் எழுதப்பட்டுள்ள வேத வசனத்தின்படி நாம் கட்டுகிற கட்டிடத்தை பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகியவைகளினால் கட்டி முடிக்கலாம். நாம் ஒவ்வொருவரும் கட்டினதற்கான வேலைப்பாடு ஒருநாள் வெளிப்படும். நீங்கள் எப்படி உங்கள் குடும்ப வாழ்க்கையைக் கட்டப்போகிறீர்கள் என்பதை இப்பொழுதே, இன்றே தீர்மானியுங்கள். 
-    Mrs. ஜெபா டேவிட்கணேசன்

ஜெபக்குறிப்பு:
இம்மாதம் முழுவதும் நடைபெறும் ஊழியங்களில் தேவகரம் உடனிருந்து வழி நடத்த ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)