இன்றைய தியானம்(Tamil) 09.03.2025
இன்றைய தியானம்(Tamil) 09.03.2025
தகப்பனின் அன்பை உணர்நத மகன்
"...அவர் தமது அன்பினிமித்தமும், தமது பரிதாபத்தினிமித்தமும் அவர்களை மீட்டு, பூர்வ நாட்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச் சுமந்து வந்தார்" - ஏசாயா 63:9
Hello குட்டீஸ்! மழைக்காலம் முடிந்து, வெயில் காலம் வந்துருச்சி. இப்பவே வெயில் பயங்கரமா சுட்டெரிக்குது. அதனால நல்லா தண்ணீர் குடிக்கணும், வெயில்ல சுத்த கூடாது O.k வா. ஆமா, குட்டீஸ்! நீங்க ஓட்டு வீடு, அடுக்கு மாடி வீடு, மாடி வீடெல்லாம் பார்த்திருப்பீங்க. மண் வீடு அதுவும் கூரை போட்டது பார்த்திருக்கீங்களா, தினேஷ் என்ற குட்டி தம்பி தனது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி எல்லோருடனும் சந்தோஷமாக கூரை வீட்டில் தான் வசித்து வந்தான். ஒரு நாள் தினேஷின் அப்பா கூரை வீட்டை மாற்றி ஓடு போடுவதற்காக வேலைக்கு ஆட்களை அழைத்து வந்து அவர்களுடன் ஓட்டை மாட்டிக் கொண்டிருந்தார். இதை அவனுடைய தாத்தா பார்த்துக் கொண்டிருந்தார். தனது மகன் வேலையாட்களுடன் சேர்ந்து வேலை பார்ப்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியைத் தந்தாலும் மறுபக்கம் சுட்டெரிக்கும் வெயிலில் நின்று பார்ப்பது அவருக்கு கஷ்டமாக இருந்தது. அப்பொழுது தனது மகனை அழைத்து தம்பி கொஞ்சம் மோர் குடித்து விட்டுப் போய் வேலை செய்யலாம் என்றார். மகன் கேட்க வில்லை. இன்னும் அதிக வெயிலில் நிற்பதை பொறுத்துக் கொள்ள முடியாத தகப்பன், மறுபடியும் தம்பி கொஞ்சம் இறங்கி வந்து ஓய்வெடுத்து விட்டு பின்பு வேலை செய் என்றார். ஆனால் மகனோ இன்றைக்குள் முடிந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். தகப்பனோ, மகனை கீழே இறக்க ஒரு காரியம் செய்தார். நிழலில் நின்ற தனது பேரனைக் கொண்டு போய் வெயிலில் நிறுத்தினார். சிறுவனோ சூடு தாங்க முடியாமல் அழ ஆரம்பித்து விட்டான். இதைக் கண்ட மகன் வேகமாக இறங்கி வந்து, தனது மகனை தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார். கோபத்துடன் அப்பாவைப் பார்த்து ஏன் இப்படி செய்தீர்கள். உங்களுக்கு இரக்கமே கிடையாதா என்று திட்டினான். உடனே தகப்பன், உன் மகன் கஷ்டப்படுவதை பொறுக்க முடியாமல் இப்படி துடிக்கிறாயே, அப்படித்தான் நீ வெயிலில் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது எனக்கும் இருக்கும் என்றார். ஒரு தகப்பனின் மனநிலைமையை தெரிவிக்கத்தான் இப்படி செய்தேன். மற்றபடி பேரன் கஷ்டப்படுவதை எந்த தாத்தாவாவது விரும்புவார்களா என்றார். மகனும் தகப்பனின் அன்பை புரிந்து கொண்டான்.
தம்பி தங்கச்சி! இதேபோலத்தான் இயேசப்பாவும் நாம் இவ்வுலகத்தில் படும் பாடுகள், கஷ்டங்களை நீக்கி நமக்கு இளைப்பாறுதல் தரவேண்டுமென்று விரும்புகிறார். நம்முடைய கஷ்டம், கவலை, பாரம் எல்லாவற்றையும் அவரே சுமந்து கொள்கிறார். அவர் நம் மேல் அவ்வளவு அன்புள்ளவராயிருக்கிறார். அந்த அன்பான இயேசப்பாவுக்கு நீங்க என்ன செய்ய போறீங்க?
- Mrs. சாராள் சுபாஷ்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864