Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 21.02.2025

இன்றைய தியானம்(Tamil) 21.02.2025

 

சிலந்தி

 

"பூமியில் சிறயவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு,... தன் கைகளினால் வலையைப் பின்னி, அரசர் அரமனைகளிலிருக்கிற சிலந்திப் பூச்சியுமே" - நீதி. 30:24,28

 

சிலந்தி பூச்சி ஞானமுள்ள ஒன்றாக சாலொமோன் அரசரால் காண்பிக்கப்படுகிறது. தன்னுடைய உணவைத் தேடி வெளியே செல்லாதபடி தன்னுடைய இருப்பிடத்தையே வலையாக மாற்றி, தனக்கான உணவை, தான் இருந்த இடத்திலேயே பெற்றுக் கொள்கிறது. அதாவது தனக்கு தேவையான உணவை வலையில் சிக்க வைத்து சாப்பிடுகிறது.

 

இன்றைக்கு சமூக வலைதளங்களும், நம்மை அப்படித்தான் இருந்த இடத்தில் இருந்தே, நம்முடைய நேரத்தை, நம்முடைய குடும்ப உறவுகளை சிதைக்கிறது, தேவையற்ற காரியங்களைப் பார்ப்பதிலே நம்மை சிக்க வைக்கிறது. Tele Shopping -ல் தேவையற்ற பொருட்களை வாங்கி கடனாகிப் போன மக்கள் உண்டு. தேவையற்ற பொருட்களை வாங்கி அடுக்கி வைக்கிறோம். ஆடம்பர பிரியர்களாக நம்மை மாற்றி வைத்துள்ளது சமூக " வலை " தளம். வலை வீசி நம்மைப் பிடிக்கும் வேடனைப் போல வலைதளங்களில் நமக்கு தீமை செய்யக் காத்திருக்கும் கூட்டம் இருக்கிறது. "தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில் உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைத்தேடிச் சுற்றித்திரிகிறான்"(1பேது. 5:8).  

 

போதைபழக்கங்களும் அப்படித்தான் சிறியதாகத் துவங்கி, நம்மை முழுவதும் அடிமையாக்கி விடுகிறது. நண்பர்கள் மூலம் ஒரே ஒரு முறை மட்டும் எங்களுடன் குடிக்கிறாயா? புகை பிடிக்கிறாயா? என்று துவங்கும் பிள்ளைகள் நாளடைவில் எல்லா போதைப் பழக்கவழக்கங்களுக்கும் அடிமையாகி வாழ்க்கையைத் தொலைத்து விடுகிறார்கள் அல்லவா? அவர்களோடு மட்டுமில்லாமல் அவர்கள் குடும்பத்தினரும் பிரச்சனைக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி வறுமை, வியாதி, கைது நடவடிக்கைகள் வரை போதையினால் பாதிக்கப்பட்ட மனிதரும் அவரைச் சுற்றி உள்ள உறவுகளும், நண்பர்களும் பாதிக்கப்படுகின்றனர். எத்தனை அவமானம்? எத்தனை வேதனை?"

 

தயவு செய்து சகோதரனே சற்று சிந்தித்துப் பார். ஆன்லைனில் கடன் தருவதாகச் சொல்லி, பணத்தையும், மானத்தையும் இழந்தவர்களை நாம் செய்திகளில் கேட்கிறோம். ஆபாச வலை தளங்களில் சிக்குண்டு கிடக்கும் மக்கள் கோடிக்கணக்கானவர்கள். "ஆண்டவரால் தெரிந்து கொள்ளப்பட்ட நாம் வஞ்சிக்கப்படாதபடி எச்சரிக்கையுடன் செயல்படுவோம்". "வலை" யில் சிக்கிக்கொண்ட பூச்சிகளைப் போல உயிரிழக்காமல், ஞானமாய் வலைதளங்கள் பயன்படுத்துவோம்.

- Mrs. பேபி காமராஜ்

 

ஜெபக்குறிப்பு:

பிலிப்பு சுவிசேஷ ஊழியங்கள் மூலம் பல புதிய கிராமங்கள் சந்திக்கப்பட ஜெபியுங்கள் .

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)