Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 16.02.2025

இன்றைய தியானம்(Tamil) 16.02.2025 (Kids Special)

 

தேனீக்கள்

 

"புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்; கடிந்து கொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான்" - நீதிமொழிகள் 15:32

 

பச்சையான புல்வெளிகள், அழகான நீரோடைகள், உயர்ந்த மலைகள், கொத்துக்கொத்தாய் பூத்துக் குலுங்கும் மரம் செடி கொடிகள். இவைகளையெல்லாம் பார்க்கும் போது யாருக்குத் தான் பிடிக்காது. உங்களுக்கும் பிடிக்குமா குட்டீஸ்! மனதை கவரக் கூடிய எந்த ஒரு பொருளையும் பார்க்கும் போது சந்தோஷமாகத் தான் இருக்கும். But எல்லாவற்றையும் அனுபவிக்க முடியாதில்லையா? குட்டிச்செல்லங்களே! O.k இன்றைக்கு தேனீ நமக்கு என்ன பாடம் சொல்லித் தரப் போகுதுன்னு ஒரு Story கேட்கலாமா?

           

ஒரு காட்டுக்குள் அழகான தேனீக்கள் கூட்டம் வாழ்ந்து வந்தது. பூக்கள் மேல் உட்கார்ந்து தேன் எடுக்கும் சுபாவம் கொண்டது தேனீக்கள். உங்க எல்லாருக்கும் தேன் ரொம்ப பிடிக்குமா? எனக்குந்தான். அந்தக் கூட்டத்திலுள்ள ஒரு தேனீக்கு எல்லா பூக்கள் மீதும் அமர்ந்து விளையாடியது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. Evening அம்மா கூட walking போகும் போது தேனீ அன்றைக்கு நடந்த காரியங்களையெல்லாம் சொல்லிக் கொண்டே போனது. சில பூக்கள் மீது அமரும்போது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. சில பூக்கள் அழகாக இருந்தது என்று சொல்லி ரொம்ப தூரம் travel பண்ணினதே தெரியாமல் போனது. என்ன குட்டீஸ்! நீங்களும் daily சந்திக்கின்ற பிரச்சனையை பெற்றோரிடம் சொல்லணும் O.k வா. அம்மா தேனீ சொன்னது அதிகம் மணம் தரும் பூக்கள் மீது அமரக்கூடாது அது உன்னையே அழித்துவிடும் என்று. O.k அம்மா என்று சொல்லி விட்டு அந்த தேனீ எப்பொழுதும் போல் காட்டிற்குள் சென்று தேனை ருசித்து ருசித்து சாப்பிட்டது.

       

மற்ற எல்லா தேனீக்களும் பூக்களை தொட்டு விளையாடுவது, தேனை சேகரிப்பது என்று jolly யாக இருந்தது. நம்ம குட்டி தேனீயும் சந்தோஷமாய் எல்லா பூக்களையும் தொட்டு விளையாடியது. ஒரு அழகான பூவின் மீது அமர்ந்தது. அம்மா சொன்னதை மறந்து போனது. வாசனை தரக்கூடிய அந்த பூவின் மணம் அப்படியே தூங்க வைத்தது. கண்ணை திறந்து பறக்க நினைத்த தேனீ பறக்க முடியாமல் தவித்தது. ஐயோ! என் தாய் சொல்லைக் கேட்கவில்லையே என நினைக்கும் போதே தேடி வந்த அம்மா தேனீ கீழே அதை அந்தபூவிலிருந்து தள்ளி விட்டது. உடனே தேனி பறந்து சென்றது. கீழ்ப்படியாத தனக்கு ஆபத்து காத்திருப்பதை உணர்ந்து அம்மா தேனீயிடம் மன்னிப்பு கேட்டது.

       

என்ன செல்லங்களே! பெற்றோரின் வார்த்தைக்கு கீழ்படியாமல் நடந்தால், ஆபத்தில் மாட்டிக் கொள்வோம். கீழ்படியும் பிள்ளை தான் 'மேல்படி' என்ற ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ள முடியும். O.k தானே குட்டீஸ்!

- J.P. ஹெப்சிபா

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)