இன்றைய தியானம்(Tamil) 10.02.2025
இன்றைய தியானம்(Tamil) 10.02.2025
லிவியாதான்
"...கர்த்தர் லிவியாதான் என்னும் நீண்ட பாம்பை,... கோணலான சர்ப்பத்தையே,... வலுசர்ப்பத்தைக் கொன்றுபோடுவார்" - ஏசாயா 27:1
அன்பானவர்களே, இன்று நாம் 'லிவியாதான்' என்னும் கோணலான சர்ப்பத்தைப் பற்றிப் பார்க்கலாம். இது ஒரு வலுசர்ப்பம் என்று வேதம் கூறுகிறது. இதைப் பற்றி யோபு 41 ஆம் அதிகாரம் முழுவதும் வாசிக்கலாம். வாசிக்க வாசிக்க, "பெருமை"யின் மொத்த உருவமாய் இருக்கும் ஒரு பலத்த பெலவானையே பார்க்கிறோம். இந்த லிவியாதானுக்குள் மறைந்திருக்கும் பொல்லாத குணங்கள் என்னென்ன தெரியுமா? 1. பெருமை 2. மேட்டிமை 3. ஆணவம் 4. அகங்காரம் 5. சுய நம்பிக்கை 6. சுய மேன்மை 7. நம்புகிறவர்களை வஞ்சித்து மோசம் போக்குதல் 8. கீழே விழத்தள்ளுதல் 9. மற்றவர்களைப் பட்சிக்கும் அக்கினியான நாவு. 10. வணங்காக் கழுத்து 11. பலசாலிகளையும் பயத்தினால் மயங்கித் திகைக்க வைப்பது 12. இகழுதல் 13. அற்பமாய் எண்ணுதல்... இன்னும் பல.....
உலக பிரசித்தி பெற்ற பாபிலோன் சாம்ராஜ்யத்தின் இராஜாவாகிய "நேபுகாத்நேச்சார்' என்பவரும் மிகுந்த பெருமைக்காரனாய் இருந்தார். தேவனாலே சொப்பனத்தில் எச்சரிக்கப்பட்ட பின்பும் தன்னைத் தாழ்த்தாமல் பெருமையான பேச்சுக்களைப் பேசியதால், மனிதர்களோடு வாழ முடியாதபடி மிருகத்தைப் போல வாழும்படி அவருடைய உருவமே மாற்றப்பட்டது. அவருடைய தலைமுடி கழுகின் இறகுகளைப் போலவும், நகங்கள் பறவைகளின் நகங்களைப் போலவும் மாறியது. மாட்டைப் போல புல் மேய்ந்தார். உடம்பெல்லாம் பனியிலே நனையும்படி தரையிலே கிடந்தார். இந்த சம்பவத்தை தானியேல் 4 ஆம் அதிகாரத்தில் வாசிக்கலாம். இதைப் போலவே 'தீரு' தேசத்தை அரசாண்ட இராஜாவிடமும் மிகப் பெரிய 'பெருமை' காணப்பட்டது. இவரைப் பற்றியும் எசேக்கியேல் 28: 1- 19 வரை வாசிக்கலாம்.
பிரியமானவர்களே! "தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்" மேட்டிமையுள்ள எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன், "அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்" பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கும் தேவன் தாழ்மையுள்ளவர்களை கண்டாலோ அவர்கள் மீது கிருபையை பொழிகிறார். "மேன்மைக்கு முன்னானது தாழ்மை" என்றும் "கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்" என்றும் வேதம் சொல்லும் காரிங்களை கவனித்து பெருமையை நம் வாழ்வை விட்டு அகற்றுவோமாக!
- Mrs. பிரிசில்லா தியோபிலஸ்
ஜெபக்குறிப்பு:
சுகமளிக்கும் ஆராதனையில் கலந்து கொள்பவர்கள் பூரண சுகத்தைப் பெற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864