இன்றைய தியானம்(Tamil) 05.12.2024
இன்றைய தியானம்(Tamil) 05.12.2024
எஜமானுக்காக நில்
"…வழியிலே ஒரு சிங்கம் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொன்று போட்டது;... கழுதை அதினண்டையிலே நின்றது; சிங்கமும் பிரேதத்தண்டையிலே நின்றது" - 1 இராஜா. 13:24
1இராஜா. 13 : 1 - 32 வரையுள்ள வசனங்களில் தேவன் எப்படிப்பட்டவர், தீர்க்கதரிசனம் எப்படிப்பட்டது, தீர்க்கதரிசி எப்படிப்பட்டவர் என்பதையும், அவனுக்கு உதவியாக இருந்த கழுதை எப்படிப்பட்டது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். தனக்கு விரோதமான தீர்க்கதரிசனத்தைக் கேட்ட ராஜா கோபப்படுகிறான், அந்த தீர்க்கதரிசியை பிடியுங்கள் என்று தன் கையை அவனுக்கு விரோதமாக நீட்டினான். உடனே ராஜாவின் கை முடக்கக்கூடாதபடிக்கு மரத்துப் போயிற்று. உடனே தீர்க்கதரிசியிடம் கெஞ்சினான். தீர்க்கதரிசி தேவனிடம் வேண்டுதல் செய்த போது கை பழைய நிலைமைக்கு வந்தது. ராஜா அவனை பார்த்து என்னிடம் வா வெகுமானம் தருகிறேன் என்றார்.
எச்சரிக்கையாய் இருக்க வேண்டியவன் தேவன் தம்மிடம் இரகசியமாய் கூறிய காரியங்களை ராஜாவிடம் சொல்கிறான். (1இராஜா. 13 : 8 - 9) இதைக் கேட்ட அந்த ஊரில் இருந்த உள்ளூர் தீர்க்கதரிசி அவனை வழிமறித்து, "தேவன் உன்னை அழைத்து என் வீட்டில் ஆகாரம் கொடுக்கச் சொன்னார்" என்றான். உடனே வெளியிலிருந்து வந்த தீர்க்கதரிசி தேவனுக்காகவும், அவரது வார்த்தைக்காகவும் நில்லாமல்,அந்த கிழவனான தீர்க்கதரிசிக்கு கீழ்படிந்து தேவ வார்த்தையை மீறினபடியினால், அவனைப் பார்த்து ( 21 - 23) உன்னை சிங்கம் கொன்று போடும் என்றான். "நீ கர்த்தர் உனக்கு கற்பித்த கட்டளையைக் கைக்கொள்ளாமல் கர்த்தருடைய வாக்கை மீறினபடியால் உன்னுடைய பிரேதம் கல்லறையிலே சேரருவதில்லை, கர்த்தர் சொல்கிறார்" அப்படியே சிங்கம் அவனை கொன்று போட்டது. மரித்த தீர்க்கதரிசியின் கழுதை அவன் சரீரத்திற்கு அருகேயே நின்று கொண்டிருந்தது.
எனக்கருமையான தேவ பிள்ளைகளே! மேலே கண்ட வேதப் பகுதியில் நாம் கற்றுக் கொள்ளக் கூடிய சத்தியங்கள் என்னவென்றால் தேவன் நமக்கு அவரது சத்தியத்தை கைக்கொள்ளுங்கள் என்று சொல்கிற காரியத்தில் நாம் எப்படி நடக்கிறோம். கைக்கொள்கிறோமா? இல்லை மீறி நடக்கிறோமா? கைக் கொண்டால் தப்பித்து கொள்வோம் வரப்போகும் ஆக்கினையிலிருந்து தப்பலாம். அந்த கழுதை சிங்கம் தனது எஜமானைக் கொன்ற போதிலும் அந்த சிங்கம் நம்மையும் கொன்று போடும் என்று பதறாமல் தன் எஜமானுக்காக தன் ஜீவனையும் பணயம் வைத்து நிற்கிறது. நாம் நம்முடைய பரம எஜமானாகிய இயேசு அப்பாவுக்காக எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம். இந்த கழுதையின் மூலம் நமக்கு நல்ல பாடம் கிடைத்திருக்கிறது. "எஜமானுக்காக நில்” கர்த்தர் ஆசீர்வதிப்பாராக!
- Pr. S.A. இம்மானுவேல்
ஜெபக்குறிப்பு:
ஒவ்வொரு மாவட்டத்திலும் 300 கிதியோன்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864