இன்றைய தியானம்(Tamil) 14.05.2025
இன்றைய தியானம்(Tamil) 14.05.2025
பெருமை வேண்டாம்
மனமாற்றத்திற்கு காரணம்
"...மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது" - மத்தேயு 5:16
தென் ஆப்பிரிக்காவில் ஆட்டன்பர்ட் என்ற கிராமத்தில் ஒரு கொடூரமான மனிதன் இருந்தான். அவன் ஒரு கொலைக்காரன். அரசாங்கம் அவனை கொன்று அவனது தலையை கொண்டு வருகிறவர்களுக்கு சன்மானம் (வெகுமதி) கொடுக்கப்படும் என்ற அறிக்கையை வெளியிட்டது. அதனால் அநேகர் அவனை பிடிக்கவும், கொல்லவும் போனார்கள். அந்த கொடூரன் அவர்கள் அனைவரையும் கொலை செய்தான். இப்படிப்பட்ட காலக் கட்டத்தில் அந்த கிராமத்திற்கு இராபர்ட் மொபேட் என்ற மனிதன் ஊழியத்திற்குச் சென்றார். அந்த கிராமத்தில் ஒரு குடிசை வீடு உண்டாக்கி, அதிலே தங்கி சிறு குழந்தைகளுக்கு கதைகளை கற்றுக் கொடுத்தார். அப்படி கதை கேட்க வந்த குழந்தைகள் சிரங்கும், சொரியுமாக வந்தார்கள். அவர்களை குளிப்பாட்டி சுத்தப்படுத்தி அவர்களது துணியை துவைத்து கொடுத்தார். இவைகளை கவனித்த அந்த கொடூரனும், கொலைகாரனுமான அந்த மனிதன் மனம்மாறினான். வேதத்தை படித்து முழுவதும் மனம்மாறி அரசாங்கத்தால் மன்னிப்பையும் பெற்று புதுமனிதனாக மாறினான்.
அன்பான தேவ மக்களே, மேலே உள்ள வசனம் மத். 5:16 என்ன சொல்கிறது? உங்களது நற்கிரியையை அநேகர் கண்டு, பரலோக பிதாவை விசுவாசித்து தொழுது கொள்வார்களாக. மேலே கண்ட தேவ மனுஷன் அந்த கொடூரமான கொலைக்காரனுக்கு வேதப்பாடம் எடுத்தாரா? அவனை அவர் சந்திக்கவில்லை, மாறாக அந்த தேவ மனிதனின் ஒவ்வொரு செயல்பாட்டையும் கவனித்த அந்த மனிதன் தானே முன் வந்து வேதம் வாங்கி படித்து, தனது பழைய வாழ்க்கையை விட்டு முற்றும் மாறினான்.
எனக்கருமையான தேவபிள்ளைகளே, நம்மை சூழ்ந்து அனேக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நம்மை அனுதினமும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். வசிக்கிற இடமோ, படிக்கிற இடமோ, வேலைபார்க்கும் இடமோ எவ்விடத்திலும் தேவ அன்பை நாம் எப்படி வெளிப்படுத்துகிறோம். நம்முடைய கிரியைகள் எப்படிப்பட்டதாக உள்ளது. அந்த தேவ மனிதன் இராபர்ட் மொபேட்டைப் போல நம் செயல்பாடுகள் இருந்தால் கண்டிப்பாக பிறர் நம் தேவனை ஏற்றுக்கொள்வார்கள். போதனையை விட நற்கிரியைகளே பெரிய மாற்றத்தை கொண்டுவரும். இன்றைக்கு நம்முடைய கிரியைகள் அனைத்தும் நற்கிரியைகளாக மாறுவதாக. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
- Mrs.எப்சிபா இம்மானுவேல்
ஜெபக்குறிப்பு :-
VBS பாடல்கள் அனேக சிறுவர் உள்ளங்களில் பதிய, அதை பாட கேட்கிற பெற்றோர் கிறிஸ்துவின் அன்பை அறிய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864