இன்றைய தியானம்(Tamil) 30.11.2024 (Gospel Special)
இன்றைய தியானம்(Tamil) 30.11.2024 (Gospel Special)
நீங்களும் சாட்சிகள் தான்
"…சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள்" - சங்கீதம் 96:3
நான் மாதந்தோறும் ஊழியம் செய்யும் ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தேன். வேலை செய்து மதியம் இளைப்பாறிக் கொண்டிருந்த சில பெண்களிடம் 'இயேசு கிறிஸ்துவைப் பற்றி கூறி, அவர் நமக்காக சிலுவையில் மரித்திருக்கிறார்" என்று சொல்லி கைப்பிரதிக் கொடுத்தேன். அவர்களுக்கு அது புரிவது அரிதாக இருந்தது. நம்பாமல் சிரித்தார்கள். பின்பு நான் என் வாழ்வில் இயேசுகிறிஸ்து செய்ததை சாட்சியாகக் கூறினேன். எட்டு வருடங்களாக பில்லி சூனிய கட்டில் அகப்பட்டு பல போராட்டங்களை சந்தித்து எங்கெங்கோ அலைந்தும் சுகம் கிடைக்காமல் இருந்த போது இயேசுவை அறிந்து, கொள்ளும் சிலாக்கியம் கிடைத்தது. அவரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, விசுவாசிக்க தொடங்கின போது, இயேசுவானவர் என்னுடைய பில்லி சூனியக்கட்டிலிருந்து விடுதலைக் கொடுத்ததை சாட்சியாக சொல்லி, மேலும் இயேசுவின் சுவிசேஷத்தை அறிவித்தேன். கவனமாகக் கேட்டு, கைப்பிரதியும் வாங்கிக் கொண்டார்கள்.
மாற்கு 5 ஆம் அதிகாரத்தில் அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் பிரேதக் கல்லறைகளில் இருந்து வந்து இயேசுவிடம் சுகத்தைப் பெற்றுக் கொண்டான். அந்த அசுத்த ஆவியுள்ள மனுஷன் வஸ்திரம் தரித்து இயேசுவின் பாதத்தில் அருகே இருப்பதைப் பார்த்து ஜனங்கள் சந்தோஷப்படாமல் பயந்தார்கள். ஊரை விட்டே போகச் சொல்லிவிட்டார்கள். ஆனால் இந்த கல்லறை மனிதனோ கர்த்தர் தனக்கு இரங்கி, தனக்குச் செய்தவைகளையெல்லாம் மற்றவர்களுக்கு சாட்சியாக பிரசங்கித்தான். பாருங்கள் தேவனிடமிருந்து நன்மையை பெற்றுக்கொண்டு அவனால் அமைதியாயிருக்க முடியவில்லை. தன் வாழ்வில் நடந்த அற்புதத்தை பிறருக்கு கூறினான். அதன்மூலம் அநேகர் ஆண்டவர் மேல் விசுவாசம் வைத்தார்கள்.
பிரியமானவர்களே! இயேசு ஒரு நன்மையும் எனக்கு செய்யவில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? இல்லவே இல்லை. எத்தனை எத்தனையோ அற்புதங்களை செய்திருக்கிறார் அல்லவா? அதை சாட்சியாக மற்றவர்களுக்கு அறிவியுங்கள். நீங்கள் சொல்லும் உங்களுடைய சிறுசாட்சி மற்றவர்களிடத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும். பிரசங்கம் பண்ணத் தெரியாத லேகியோன் தான் சுகத்தைப் பெற்ற பின்பு பத்து பட்டணங்களை அசைந்து விட்டான். நம்மைக் குறித்து என்ன? இயேசுவிடமிருந்து எத்தனையோ நன்மைகளை பெற்றுக் கொண்ட நாமும் இயேசுவை பிரசித்தப் பண்ணத் தொடங்குவோமா!
- Sis. எஸ்தர் செல்வி
ஜெபக்குறிப்பு:
இராக்லாண்டு பைபிள் காலேஜ் பிள்ளைகள் கர்த்தருக்காய் செயல்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864