இன்றைய தியானம்(Tamil) 28.11.2024 (Gospel Special)
இன்றைய தியானம்(Tamil) 28.11.2024 (Gospel Special)
புதிய நோக்கம்
"இயேசு அவர்களை நோக்கி: என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்" - மாற்கு 1:17
ஜேக்கப் டேவிஸ் 1800 இல் வாழ்ந்த தையல்காரர். அந்த நாட்களில் தங்கச் சுரங்கங்களில் வேலை பார்ப்பவர்களின் கால் சட்டை (Pant) சீக்கிரத்தில் கிழிந்து போய்விடும். எனவே இதற்குத் தீர்வு காண்பதற்காக, கூடாரம் செய்ய பயன்படும் துணியை வாங்கினார். அந்தத் துணி எளிதில் கிழியாத கனமான துணியாக இருந்தது. அந்த துணியில் வேலையாட்களுக்கு ஏற்ற கால்சட்டையை தைத்துக் கொடுத்தார். அன்று தான் நீல நிற ஜீன்ஸ் பிறந்தது. அது இன்றைக்கும் பலர் மிகவும் விரும்பி அணியும் ஆடையாகவும் மாறிவிட்டது. ஒரு மனிதன் ஒரு கூடார துணிக்கு புது வடிவம் கொடுத்ததினால் இது நடந்தது.
சீமோன் பேதுருவும் அவரது நண்பர்களும் கலிலேயாக் கடலில் மீன் பிடிக்கும் சாதாரண மீனவர்கள் தான். இயேசு கிறிஸ்து வந்து, அவர்களிடம் "என் பின்னே வாருங்கள் உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்" என்று சொல்லி, அவர்களுக்கு ஒரு புதிய நோக்கத்தையும், துவக்கத்தையும் கொடுத்தார். இந்த புதிய நோக்கம் அவர்களது வாழ்க்கையையே மாற்றியது. இயேசுவே அவர்களுக்கு எல்லாவற்றையும் போதித்தார். அவர்கள் மூலமாகத் தேவன் மக்களின் மனதைத் தொட்டார். இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் இவர்கள் உலகுக்கு எடுத்துச் சென்றனர்.
பிரியமானவர்களே! இயேசுவின் சீஷர்களைப் போல கிறிஸ்துவின் அன்பையும், இரட்சிப்பையும் அறிந்த நாமும் அதனை அறியாத உலகின் மக்களிடையே நற்செய்தியாய் எடுத்துச் செல்லுவோம். நாம் கொடுக்கின்ற ஒரு சிறிய துண்டு கைப்பிரதியோ, புதிய ஏற்பாடோ அவர்களுடைய வாழ்க்கையிலும், நோக்கங்களிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற எத்தனையோ சாட்சிகளை கூறமுடியும். வாழ்விலுள்ள பிரச்சனையால் தற்கொலை செய்து மடிந்து போக எண்ணிய எத்தனையோ நபர்களை ஒரு கைப்பிரதி காப்பாற்றியுள்ளது. அவர்கள் வாழ்வதற்காக புதிய நோக்கத்தைக் கொடுத்து வாழ வைத்திருக்கிறது. அன்றைக்கு அந்த சரியான நேரத்தில் அந்த நபருக்கு அது கிடைக்காதிருக்குமானால், அந்த ஆத்துமாவின் நிலை என்ன? சிந்திப்போம். நம்மால் இயன்றதை தேவனுக்காய் செய்வோம். தேவ அன்பினால் நம் இருதயம் நிரம்பட்டும். அண்டை அயலகத்தார் என அனைவருக்கும் இயேசுவின் அன்பை கூறுவோம். இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி அவர்களையும் ஒரு புதிய சிருஷ்டியாய் மாற்றி, புதிய நோக்கத்தைப் பெற்றுக் கொள்ளும் படியாய் ஜெபிப்போம்! கொடுப்போம்!! உழைப்போம்!!!
- Sis. பியூலா
ஜெபக்குறிப்பு:
நம் வளாகத்தில் ஜெபகோபுரம் கட்டப்பட தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864