இன்றைய தியானம்(Tamil) 11.10.2024
இன்றைய தியானம்(Tamil) 11.10.2024
ஜெபத்தின் மேன்மை
"நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்" – அப்போஸ்தலர் 6:4
இரண்டு தேவ ஊழியர்கள், ஊழியம் செய்வதற்காக வெளியூர் சென்றார்கள். எந்த ஊருக்குச் சென்றாலும், அங்கேயே தங்கி ஊழியம் செய்வது அவர்களது வழக்கம். அதில் ஒருவர் ஐந்து நிமிடம் ஜெபித்து விட்டு படுத்துக்கொள்வார். மற்றவர் இரவெல்லாம் ஜெபித்துக் கொண்டே இருப்பார். தினமும் இது நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் ஐந்து நிமிடம் ஜெபிப்பவர் மற்றவரிடம் நான் ஜெபித்துவிட்டு உடனே துங்கி விடுகிறேன், ஆனால் நீங்களோ இரவெல்லாம் முழங்காலில் நின்று ஜெபிப்பதை நான் பார்க்கிறேன். அப்படி என்ன ஜெபிக்கிறீர்கள்? எதற்காக ஜெபிக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர் நான் நல்ல வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். அதனால் எனக்கு வரப்போகிற மனைவி இதை புரிந்து கொள்ளுகிறவளாய், என்னோடு இணைந்து ஊழியம் செய்கிறவளாய், தேவ சித்தத்தின்படி இணைந்து ஓடுகிறவளாய் இருக்க வேண்டும் என்று ஜெபிக்கிறேன் என்றார்.
இதைப் போலவே வேதத்திலும் யாக்கோபு என்ற தேவ மனிதர் தன் சகோதரன் ஏசாவினால் தனக்கு ஆபத்து நேரிடும் என பயந்து, இரவெல்லாம் தேவனோடு போராடி ஜெபித்தார். “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்”(ஆதி 32:26) என்று தேவனோடு போராடி ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டார். யோவான் 14:14 ல் “என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்”, என்ற வசனத்தின் படி பிரியமானவர்களே அவர் எதற்காக இரவெல்லாம் ஜெபித்தாரோ அவர் மனவிருப்பத்தின்படியே கொடுத்தார் நம் தேவன்.
ஆம், பிரியமானவர்களே! நாம் எதைக் கேட்டாலும் நிச்சயம் நம் வாழ்வில் தேவன் செய்வார். ஆனால் நாம் இரவு முழுவதும் ஜெபிக்கிறோமா? ஜெபத்தில் அதிக நேரம் செலவிடுகிறோமா? எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம். நாம் ஜெபத்திற்காக செலவிடுகிற நேரம் குறைவுள்ளதாக இருக்குமானால் தேவனிடத்தில் பெரிய காரியங்களை நாம் எதிர்பார்க்க முடியாது. “மனுஷனால் கூடாதது தேவனால் கூடும் “என்ற வசனத்தின்படி, நாம் ஜெபிக்கிற பிள்ளைகளாக மாறுவோம். அற்புதங்களை காண்போம். கடவுள் நமக்குக் கொடுத்த வாக்குத்தத்தை நாம் பற்றிக்கொண்டு, ஜெபத்திலே தரித்திருந்தால் ஜெபத்தின் மேன்மையை நாம் காணலாம். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.
- Bro. ரூபன் கிறிஸ்டி
ஜெபக்குறிப்பு:
நம் டே கேர்(Day Care) பிள்ளைகளை தாங்கும் குடும்பங்களின் ஆசீர்வாதத்திற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864