இன்றைய தியானம்(Tamil) 10.10.2024
இன்றைய தியானம்(Tamil) 10.10.2024
பெரிய வேலை
"…யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான்…" - ஏசாயா 6:8
ஸ்டேன்டர்ட் ஆயில் கம்பெனியின் நிறுவனத்தினர் தங்கள் இந்தோனேஷியா நாட்டுக் கிளைக்கு ஒரு நிர்வாகியைத் தேடினர். நேர்மையும், திறமையும் நிறைந்த ஒரு நபரை தேடினார்கள். ஒரு மிஷனெரிக்கு அழைப்பு கொடுத்தார்கள். ஊழியத்தில் உண்மையாய் இருந்த அந்த மிஷனெரி ஆயில் கம்பெனி நிர்வாக பதவிக்கு வர மறுத்துவிட்டார். முப்பது டாலர் சம்பளம் தருகிறோம் என அக்கம்பெனியின் முதலாளி சொன்னார். அதையும் அந்த மிஷனெரி மறுக்கவே எவ்வளவு கேட்டாலும் தருகிறோம் என்றார். அதற்கு அவர் நான் இப்பொழுது பார்க்கும் வேலையோடு ஒப்பிடும் போது நீங்கள் அழைக்கும் வேலை ஒரு சிறு வேலை என்றார்.
மிஷனெரி என்றால் கஷ்டப்படுகிறவர்களாகவும், சாதாரணமானவர்களாகவும் நினைக்கிறோம். ஆனால் இது தேவனின் பணி, உன்னதமானவரின் ராஜ்யத்திற்காக செய்யும் பணி. இதில் பணி செய்த போது பவுல் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப் போவதில்லை என்று கூறுகிறார். சரீரத்திலும் பல பாடுகளைப்பட்டார். சுவிசேஷத்தினிமித்தம் பல கஷ்டங்களையும் அனுபவித்தார். ஆயினும் பவுல் கலக்கமடைந்தும் மனமுறிவடையவில்லை. ஏனெனில் தேவன் சர்வ வல்லவர், நம்மை பலப்படுத்துகிறவர் , சமாதான காரணர் உடனிருந்து நமக்கு பெலன் அளித்து, சேதமடையாமல் காத்து நடத்துவார். பவுலை விஷ பூச்சி கடித்தும் விஷம் ஏறாமல், சேதமடையாமல் காத்தார். கர்த்தர் சில பட்டணங்களில் பவுல் அடிகள் பட அனுமதித்தாலும், உடனே எழுந்து செல்லக்கூடிய பெலனையும், தைரியத்தையும் தேவனே அருளினார். தேவன் நம்மை கைவிடுவதில்லை. இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமையை ஒவ்வொரு நாளும் நாம் ருசிக்க முடியும். நெகேமியா பெரிய அரண்மனையில் பணி செய்தாலும் அதை பெரிய வேலையாக எண்ணாமல் கர்த்தருக்காக செய்யும் பணியினையே பெரிய வேலை என்கிறார்.
பிரியமானவர்களே! உங்கள் வாழ்வின் மிகப்பெரிய குறிக்கோளாக பரலோக ராஜ்யத்தை அடையும் பணியில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். எந்த வேலை செய்தாலும் அதின் மத்தியில் தேவனின் கடைசி கட்டளையான புறப்பட்டு போங்கள்; சுவிசேஷம் அறிவியுங்கள் என்ற உன்னதமான பணியில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளை முழுமையாக தேவனின் ராஜ்யத்தைக் கட்ட அனுப்பி வையுங்கள் தேவனின் ஆசீர்வாதம் பெறுங்கள்.
- Mrs. பேபி காமராஜ்
ஜெபக்குறிப்பு:
நம் மிஷனெரிகளைத் தாங்கும் குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864