இன்றைய தியானம்(Tamil) 09.10.2024
இன்றைய தியானம்(Tamil) 09.10.2024
தகப்பன்
"ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவது போல, நீங்கள் இவ்விடத்திற்கு வருகிறவரைக்கும்,... உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுமந்து கொண்டு வந்ததைக் கண்டீர்களே" - உபாகமம் 1:31
ஒரு தகப்பன் தன் மகனுடன் விடுமுறையை கழிக்க ஓரிடத்திற்குச் சென்றார். கடைவீதி எல்லாம் தன் மகனுடன் சுற்றி மகனுக்கு தேவையானதை வாங்கிக் கொடுத்துவிட்டு, ஊருக்கு வெளியே சென்று இயற்கையை ரசிக்க ஆரம்பித்தனர். மகன் மேகத்தை பார்த்து ஆடு போல் இருக்கிறது டயனோசர் என ரசித்தான். பின்பு ஒரு சிறு மலையைக் கண்டு அதில் இருவரும் ஏற ஆரம்பித்தனர். திடீரென திரும்பி "அப்பா என்னைப் பிடியுங்கள்" என்று சொல்லி கையை விரித்து கீழே விழுந்தான். இதனை எதிர்பாராத தகப்பன் ஓடிச் சென்று மகனைப் பிடித்தார். ஆனால் இருவரும் கீழே விழுந்தனர். தகப்பன் ஏன் இப்படி செய்தாய்? என்றார். உடனே மகன் சொன்னான் எப்படியும் நீங்கள் என்னை பிடிப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். இதோ அடி எதுவும் படாமல் இருக்கிறதே என்று சொல்லி மேலே நடந்தான்.
இதே போல தான் நம் பரலோக தேவனும், அவரை நாம் முழுவதும் நம்பலாம். ஆம், அவர் நம் தேவைகள், சூழ்நிலைகளை அறிந்தவர். ஆதலால் நன்மைகளை ஏற்ற நேரத்தில் சரியாய்த் தருவார். நாம் நம் பிள்ளைகளை நேசிக்கிறோம். ஆனால் தேவன் நாம் பாவிகளாய் இருக்கையில் நமக்காக தமது ஜீவனைத் தந்து நம்மை நேசிக்கிறார். ஒரு தகப்பன் தன் பிள்ளையை தோளில் தூக்கி சுமப்பது போல, நம் தேவன் நம்மை தூக்கி சுமப்பார். நரைவயது மட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் என ஏசாயா 46: 4 ல் கூறுகிறார். அதே போல் எத்தனையோவிசை மரணத்தின் விளிம்பு வரை சென்றாலும், அவர் கரம் நம்மை தூக்கி மரணத்திற்கு விலக்கிக் காத்துள்ளது. நம்மை கண்மணியைப் போல் கருத்தாய் காக்கிறார். இரவு, பகல் பாராமல் தூங்காமல் பாதுகாக்கிறார். இதே போல் இஸ்ரவேல் ஜனங்களை நாற்பது வருஷம் வனாந்தரத்தில் நடத்தி பாதுகாத்து வந்தார். அவர்கள் மேலிருந்த வஸ்திரம் பழையதாய்ப் போகவும் இல்லை, அவர்கள் கால்களிலிருந்த பாதரட்சை பழையதாய் போகவும் இல்லை. அவ்வாறு தேவன் நன்றாய் பாதுகாத்து வந்தார்.
இதை வாசிக்கும் நண்பரே! தேவன் நமக்கு அப்பா பிதாவே என கூப்பிடப் பண்ணுகிற புத்திர சுவிகாரத்தைத் தந்துள்ளார். எனவே அவர் நாமத்தின் மேல் விசுவாசம் உள்ளவர்களாய் நாம் அவரை தகப்பனாக ஏற்றுக் கொள்ளும் போது, அவரும் தம்முடைய பிள்ளையாக ஏற்றுக் கொள்கிறார். ஏற்றுக்கொள்வதோடு மாத்திரமல்ல, அன்றிலிருந்து நம்மை கரிசனையோடு அக்கறையாய் நம் காரியங்களை எல்லாம் அவர் மேல் ஏற்றுக் கொள்வார். நம் தேவைகளை சந்தித்து நமக்குப் போதுமானவராய் இருப்பார். நம்மை பரலோகம் சேர்க்கும் வரை உடனிருந்து நடத்துவார்.
- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு:
நம் Day Care சென்டரில் படிக்கும் ஆதிவாசி பிள்ளைகள் இரட்சிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864