இன்றைய தியானம்(Tamil) 15.09.2024
இன்றைய தியானம்(Tamil) 15.09.2024
உற்சாகமாய் கொடு
"…உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்" - 2 கொரிந்தியர் 9:7
ஹலோ குட்டி செல்லங்களே! How are you, ஸ்கூலில் உங்களுக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்களா? ஆனால் எல்லாரும் ஹெல்ப் பண்ணுவாங்களா? யாருக்கெல்லாம் கொடுக்கின்ற மனசு இருக்கிறதோ, அவர்கள் மேல் இயேசப்பா பிரியமாய் இருக்கிறார். நண்பர்கள் ஒருவருக்கொருவர் போட்டி
புதிதாக ஸ்கூலில் சேர்ந்த அருள் மூன்று மாதமாகியும் புது யூனிபார்ம் தைக்கவே இல்லை. சட்டை கிழிந்திருந்தது, பேண்ட் கலர் எல்லாம் மங்கி வெளுத்திருந்தது. கூலி வேலை செய்துவிட்டு வருகிற அப்பாவை தூரத்தில் கண்டு வேகமாக ஓடினான். அப்பா எனக்கு மட்டும் புது யூனிபார்ம் தைக்கவே இல்லயப்பா ப்ளீஸ் தச்சு தாங்க என்ற மகனின் சொல்லைக் கேட்டு, புரிந்து கொண்ட அப்பா சரி... சரி... என்று தலையசைத்துக் கொண்டே சென்றார். ஏனென்றால் தினமும் அப்பாவுக்கு வேலை கிடைக்காது. அப்பாவிடம் கேட்டு பயனில்லை, இயேசப்பாவிடம் கேட்கலாம் என்று நினைத்து டெய்லி ஜெபிக்க ஆரம்பித்தான். அன்றைய நாள் ஸ்கூலில் வகுப்பாசிரியர் நடத்திய பாடங்களில் இருந்து சில கேள்விகளை கேட்டார். அருள் டாண்.. டாண்.. என்று கரெக்டா பதில் சொன்னான். எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள். புதிதாய் வந்த பையன் சூப்பரா படிக்கிறானே! ஹலோ, அருள் எங்களுக்கு நீ பதில் சொன்ன விதம் ரொம்ப பிடித்திருந்தது என்று பாபுவும், மணியும் ஃபிரண்ட்ஸ் ஆனார்கள். அருள் ரொம்ப ஏழையாக இருப்பதால் நம்மை யாருக்கும் பிடிக்காது என்று நினைத்து யாரிடமும் பேச மாட்டான்.
ஈவினிங் மணியும், பாபுவும் அருளைப் பார்க்க வீட்டிற்கு வந்து சர்ப்ரைஸ் கொடுத்தாங்க. பரிசாக கொடுத்த கவரை பிரித்து பார்த்தால் இரண்டு யூனிபார்ம் டிரஸ். அருள் முகம் பிரகாசித்தது. அருள் தான் களிமண்ணால் செய்த விதவிதமான பொருட்களை பாபுவுக்கும், மணிக்கும் கொடுத்தான். சந்தோஷத்தோடு வாங்கிக்கொண்டு, ரொம்ப அழகாக இருக்கிறதே! நீதான் செய்தாயா? என்று கேட்ட மணியிடம் ஆமா அடுத்த முறை உங்களுக்கும் செய்யச் சொல்லித் தருகிறேன் என்று சொல்லிக் கொண்டே வருகின்ற ஞாயிறு நாம் எல்லோரும் சண்டே கிளாஸ் போவோமா? என்ற புதிய தொடக்கத்தோடு அவர்கள் நட்பு தொடர ஆரம்பித்தது. அன்பு தம்பி, தங்கைகளே! மற்றவர்களுக்கு கொடுப்பது எவ்வளவு சந்தோஷத்தை கொடுக்கின்றது நீங்களும் தேவையில் உள்ளவர்களுக்கு கொடுத்து ஜீசஸ் -ஐயும் சந்தோஷப்படுத்துங்கள். செய்வீர்களா ? வெரி குட் !
- Mrs.கிரேஸ் ஜீவமணி
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864