இன்றைய தியானம்(Tamil) 09.09.2024
இன்றைய தியானம்(Tamil) 09.09.2024
எப்படிப்பட்ட விசுவாசம்
"…இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்" - லூக்கா 7:9
இன்றைய வேத பகுதியில் வரும் நூற்றுக்கு அதிபதி சுயநலமாகவோ தனக்காகவோ, தன் குடும்பத்தின் குடும்பத்தினருக்காகவோ இயேசுவிடம் வரவில்லை. தன் வேலைக்காரரின் சுகத்திற்காக தன்னை தாழ்த்தி இயேசுவின் வார்த்தைகளின் வல்லமையை விசுவாசித்து வந்தார். இயேசு அவரது விசுவாசத்தை மேற்கண்டவாறு பாராட்டி இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று சொல்லி வேலைக்காரனை சுகப்படுத்தினார். இந்த சம்பவம் நமக்கு கற்றுக் கொடுப்பது என்ன? 2நாளாகமம் 7:14 அவருடைய நாமம் தரிப்பிக்கப்பட்ட ஜனங்கள் தங்களை தாழ்த்தி ஜெபம் பண்ணினால் தேசத்திற்கு ஷேமத்தை கொடுப்பதாக தேவன் வாக்கு பண்ணுகிறார். விசுவாசிகளாகிய நாம் அவருடைய வார்த்தைகளின் வல்லமையை விசுவாசித்து தேசத்தின் எழுப்புதலுக்காக, சமாதானத்திற்காக, நன்மைகளுக்காக, ஆட்சியாளர்களுக்காக ஜெபிக்கின்றோமா? அல்லது சுயநலமாக நம்முடைய காரியங்களுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறோமா? அல்லது தேசத்திற்காக ஜெபித்து பயனில்லை என்று அவிசுவாச எண்ணம் எண்ணிக் கொண்டிருக்கிறோமா? சிந்திப்போம்.
எல்லா மனுஷருக்காகவும், விண்ணப்பங்களையும், ஜெபங்களையும் வேண்டுதல்களையும், ஸ்தோத்திரங்களையும் பண்ணுவது தேவனுக்கு முன்பாக நன்மையும் பிரியமுமாய் இருக்கிறது. 1தீமோ. 2: 1-3ல் உள்ள வேத வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து பிறருடைய சிறையிருப்புகள் பிரச்சனைகளுக்காக கர்த்தரிடம் விசுவாசத்தோடு மன்றாட வேண்டும். செய்தித்தாள்களில் வரும் உள்ளத்தை உடைக்கும் காரியங்களை குறித்து எண்ணமற்று இருக்கிறோமா? பற்பலவிதமான நிர்ப்பந்தமான நிலையில் தவித்துக் கொண்டிருக்கும் ஏழைகள், திக்கற்றோர், குழந்தைகள், பெண்கள் ஆகியோருக்காக இயேசுவிடம் கெஞ்சுகிறோமா? அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும். (கலாத்தியர் 5: 6) கிரியைகளில்லாத விசுவாசம் செத்தது (யாக்கோபு 2:26) நம்முடைய விசுவாசம் எப்படிப்பட்டது?
அன்பானவர்களே, விசுவாசிகள் என அழைக்கப்படும் நாம் நமக்காக மட்டுமே ஜெபித்துக் கொண்டிராமல் தேசத்திற்காக பிறருக்காக விசுவாசத்தோடு திறப்பில் நிற்போம். நூற்றுக்கதிபதி போல நம்மை தாழ்த்தி ஜெபிப்போம். தேவனுடைய ஆச்சரியமான பதில்களை காண்போம். தேவன் பாராட்டும், கனப்படுத்தும் உண்மை விசுவாசிகளாவோம்! ஆமென்.
- Mrs. கீதா ரிச்சர்ட்
ஜெபக்குறிப்பு:
ஆகஸ்ட் 15ஆம் தேதி வாலிபர் முகாமில் அபிஷேகிக்கப்பட்ட வாலிபர்கள் ஒவ்வொரு நாளும் தங்களை அனல் மூட்டி பாதுகாத்துக் கொள்ள ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864