இன்றைய தியானம்(Tamil) 14.04.2024 (Kids Special)
இன்றைய தியானம்(Tamil) 14.04.2024 (Kids Special)
இயேசுவோடு பேசு
"நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளின் பேரில் மனமகிழ்ச்சியாயிருப்பேன்” - சங்கீதம் 119:47
கண்மணிச்செல்லங்களே, பரிட்சையெல்லாம் நல்லா எழுதினீங்களா? சிலருக்கு leave விட்டிருப்பாங்க. சிலர் பரிட்சை எழுதிக் கொண்டிருப்பீங்க. ஓகே, லீவு விட்டவுடனே என்ன செய்வீங்க. jolly -யா விளையாடலாம். மாமாவீடு, பெரியப்பா வீடு என்று வேறு ஊருக்கு போகலாம். சுற்றுலா போகலாம். நீங்களும் plan பண்ணிருக்கீங்களா? Very good. கவனமா enjoy பண்ணுங்க.
ஜெகன் குட்டி தம்பிக்கு aero plane மூலமாக இங்கிலாந்திலுள்ள மாமா வீட்டிற்கு சென்று அருகிலுள்ள அரண்மனையை பார்க்க ஆசை. குடும்பமாக இங்கிலாந்து போனதும் ராஜாவை பார்க்க வேண்டும் என்று ஜெபித்தான். உங்கள் ஆசை நிறைவேற நீங்களும் ஜெபிக்கணும் சரியா!
ஜெகன் அரண்மனையின் வாசலில் இருக்கிற காவல்காரனிடம் நான் ராஜாவைப் பார்க்க வேண்டும் என்று சொன்னதும். காவல்காரனுக்கு சிரிப்பு வந்து விட்டது. நீ சின்னப் பையன் ராஜாவைப் பார்க்க போகிறாயா? உன்னை எப்படி அனுப்புவது உன்னைப் பார்க்க ராஜா விருப்பப்பட மாட்டார் என்று சொல்லி விட்டான். ஜெகன் வாசலிலே காத்துக் கிடந்தான். எப்படியாவது ராஜாவை பார்க்க வேண்டுமே! இயேசப்பா நீங்க தான் உதவி செய்யணும். என் ஆசையை நிறைவேற்றுங்கப்பா என்று சிறிய ஜெபத்தை செய்து முடித்து, பொறுமையோடு காத்திருந்தான். ஒரு நபர் வந்தார். ஜெகன் தன் ஆசையை சொன்னதும் அரண்மனைக்குள் அழைத்துச் சென்றார். ஒவ்வொரு கதவும் திறக்கப்பட்டு ஒவ்வொருவரும் இவர்களுக்கு சல்யூட் அடித்தார்கள். அரண்மனையில் முக்கிய பொறுப்பில் உள்ளவர் என்பதை ஜெகன் தெரிந்து கொண்டான். ராஜாவைக் கண்ட ஜெகனுக்கு இது கனவா? அல்லது நிஜமா? என்றே தெரியவில்லை. ராஜாவும் ஜெகனை அன்போடு அழைத்து பேசினார். இங்கிலாந்திலுள்ள முக்கியமான இடங்களை சுற்றிப்பார்க்க Free pass -ம் கொடுத்தார். ஜெகன் சந்தோஷத்தோடு வீடு திரும்பினான்.
என்ன குட்டீஸ், ஜெகனின் ஆசை நிறைவேறினதைப் போல, உங்க ஆசையும் நிறைவேறணுமா? ராஜாதிராஜா இயேசுவோடு பேசிப் பாருங்க. இயேசுராஜா கூட நீங்க எந்த நேரமும் பேசலாம். எவ்வளவு பெரிய பாக்கியம் குட்டீஸ் இன்றைக்கே இயேசப்பா கூட பேசுங்க. Ok. Super. Bye!
- Sis. தெபொராள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864