Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 02.03.2024

இன்றைய தியானம்(Tamil) 02.03.2024

 

கிறிஸ்துவை அறிவியுங்கள்

 

"கர்த்தருடைய நாமத்தைப் பிரசித்தம் பண்ணுவேன்; நம்முடைய தேவனுக்கு மகத்துவத்தைச் செலுத்துங்கள்" - உபாகமம் 32:3

 

என் இருதய வியாதியை சுகமாக்கி என் கண்ணீரைத் துடைத்தவர், கண்ணீர் வடிக்கிறதை தரிசனத்தில் கண்ட நான், அவரது கண்ணீரைத் துடைக்க எண்ணினேன். மக்கள் அவரை அறியவில்லை என்றுதானே அழுகிறார். அவரைப் பற்றி மக்களிடம் சொல்லுவோம் என நினைத்து, பக்கத்திலுள்ள கிராமத்திற்கு சென்று வீடு வீடாக கதவைத் தட்டி இயேசுவே மெய்யான தெய்வம். அவரை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லுவேன். அவர் எனக்கு சுகம் தந்தார். உங்களுக்கும் நன்மை செய்வார் என சொல்லி வந்தேன். அங்கு ஒரு வீட்டில் ஒரு வயதான அம்மா மரணத்தருவாயில் கட்டிலில் படுத்திருந்தார்கள். சுற்றிலும் அவருடைய உறவினர்கள் இருந்தனர். நான் எல்லா வீடுகளிலும் சொன்னதைப் போல் அங்கும் சொன்னேன். இயேசுகாரர்கள் ஓதினால் நல்லது நடக்கும் என்று சொல்லுவார்கள், நீ ஓதி விடு என்றனர். நானோ பயந்து எனக்கு ஓதத் தெரியாது என்றேன். அவர்கள் அந்த அம்மாவை கட்டிலோடு வீட்டிற்கு வெளியே கொண்டு வந்தனர். என் சட்டையைப் பிடித்து ஓது என்றனர். என்னை அடிப்பார்களோ என்ற பயத்தில் இயேசப்பா இந்த அம்மாவிற்கு உடம்பிற்கு ஏதோ செய்யுது, ஏதாவது செய்து சரிபடுத்துங்க என்று சொன்னேன். உடனே அவர்களின் கை, கால்கள் இழுத்தது. கட்டிலில் இருந்து கீழே விழுந்தார்கள். ஒருவர் மூச்சு இல்லை என்றார். ஒருவர் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்து தெளித்ததும் எழுந்து உட்கார்ந்து பேசினார். சரியாகி விட்டார். எல்லோரும் மகிழ்ந்தனர்.

 

எனக்கன்பானவர்களே! பேதுருவும் ஆலயத்திற்கு செல்லும் போது ஒரு சப்பாணியான மனிதனிடம், "என்னிடத்தில் வெள்ளியும் இல்லை, பொன்னும் இல்லை இயேசுவின் நாமத்தில் எழுந்து நட" என்றார். உடனே அவன் எழுந்து நடந்தான். இதை வாசிக்கும் அன்பர்களே! நீங்கள் இரட்சிக்கப்பட்டவர்களானால் எத்தனை பேருக்கு அவரைப் பற்றி சொல்லி உள்ளீர்கள். நான் ஊழியம் செய்ய ஆரம்பித்த போது என்னிடம் வேதப்புத்தகம் கிடையாது, ஜெபிக்கத் தெரியாது, சபைக்குச் சென்றதில்லை. இயேசுவை அழுகிறவராக தரிசித்தேன். அவரது கண்ணீரைத் துடைக்க என்னால் இயன்றதை உடனே செய்ய ஆரம்பித்தேன். நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு எத்தனை ஆண்டுகளாகிறது? எத்தனை நபருக்கு இயேசுவைப்பற்றி சொல்லி இருக்கிறீர்கள்?

 

இன்று பலர் அபிஷேகம், வரங்கள், வல்லமைகளைப் பெற வேண்டும் அப்போதுதான் ஊழியம் செய்ய முடியும் என எண்ணுகின்றனர். ஆனால் நான் சொல்லுகிறேன், இயேசுவை ஏற்றுக் கொண்டு அவர் உங்கள் வாழ்வில் செய்த நன்மைகளை ருசிபார்த்திருப்பீர்களென்றால் அவற்றை பிறரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அப்போது வரங்கள், வல்லமைகள் செயல்படுவதைக் காண்பீர்கள். உங்களைக் கொண்டும் தேவன் பெரிய காரியங்களைச் செய்வார். அல்லேலூயா!

- K. டேவிட் கணேசன்

 

ஜெபக்குறிப்பு: 

லெந்துகால கூட்டங்களில் தேவனுடைய வார்த்தைகளை அறிவிக்கும் நமது ஊழியர்களை தேவன் வல்லமையாய் பயன்படுத்த ஜெபியுங்கள் .

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)