இன்றைய தியானம்(Tamil) 29.02.2024
இன்றைய தியானம்(Tamil) 29.02.2024
சிலுவை தந்த நம்பிக்கை
"…சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையும் குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக;…" - கலாத்தியர் 6:14
ரஷ்யாவில் சிறைக் கைதியாக கொடுமைகளை அனுபவித்த அலெக்ஸாண்டர் ஒரு கிறிஸ்தவர் ஆவார். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் அவர் வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். குறைவான ஆகாரம், கடுமையான வியாதி, கொடுமையான பலவீனம் இவற்றின் நடுவில் மண் தோண்டும் வேலையை அவர் செய்ய வேண்டியிருந்தது. களைத்துப் போன அவர் சற்று நேரம் இளைப்பாறும்படி நின்றார். அப்படி நிற்கும் கைதிகளைக் காவலாளிகள் கடுமையாக அடிப்பார்கள். அங்கிருந்த ஆண்டவரை விசுவாசித்த கைதிகளில் ஒருவர் அவரருகே வந்து மணலில் ஒரு சிலுவை அடையாளத்தை வரைந்து மற்றவர்கள் பார்க்காத வண்ணம் அதை அழித்து விட்டு அப்புறம் சென்றார். சிலுவையை நினைத்தவுடன் அலெக்ஸாண்டரின் உள்ளம் பெலன் கொண்டது. அவர் விடுதலை செய்யப்படும் வரை சிலுவையை நினைத்தே பாடுகளை சகித்துக் கொண்டார்.
அப். பவுல் கலாத்தியருக்கு எழுதின நிருபத்தில், சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையும் குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக என்று கூறுகிறார். அப்.பவுல் அநேக நிருபங்களை எழுதியுள்ளார், அநேக சபைகளை நிறுவியுள்ளார். மேலும் அநேக ஜனங்களை வசனத்திற்கு நேராக நடத்தியுள்ளார். இப்படி மேன்மை பாராட்ட எத்தனையோ காரியங்கள் இருந்தாலும் சிலுவையைக் குறித்து மேன்மை பாராட்டுவேனே தவிர வேறொன்றையும் குறித்து மேன்மை பாராட்ட இடமில்லை என்கிறார்.
பிரியமானவர்களே! அவர் நம் மூலமாக மகிமைப்பட வேண்டும் என்றால் நமக்கு வரும் எல்லா கஷ்டமான சூழ்நிலைகளையும், பிரச்சனைகளையும் நாம் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக இருக்க வேண்டும். சபிக்கப்பட்ட பூமியில் வாழ்கின்ற நமக்கு வரும் பாடுகள் அநேகம்தான். அப்படிப்பட்ட நேரங்களிலெல்லாம் கீழ்க்கண்ட சிந்தை நம்மை நிரப்பட்டும்: "இயேசுவானவர் சிலுவையில் சகித்த பாடுகளை விடவா நாம் மேலான பாடுகளை சகிக்க போகிறோம்" இல்லவே இல்லை. நிச்சயம் நாம் பாடுகளின் வழியாகத்தான் பரலோகம் செல்ல முடியும். எனவே பாடுகளை , உபத்திரவங்களை மகிழ்ச்சியுடன் கடந்திடுவோம்!! வாடாத கீரிடத்தைப் பெற்றிடுவோம்.
- Mrs. பேபி காமராஜ்
ஜெபக்குறிப்பு:
24 மணிநேர சங்கிலித் தொடர் ஜெபம் நமது பணித்தளங்களில் தொடர்ந்து நடைபெற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864