இன்றைய தியானம்(Tamil) 04.12.2023
இன்றைய தியானம்(Tamil) 04.12.2023
இரட்சகரின் வருகை
"சீயோன் குமாரத்தியே... உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்..." - சகரியா 9:9
இரட்சகரின் முதல் வருகையில் நடக்கப்போகும் சம்பவத்தை சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே சகரியா தீர்க்கதரிசி தீர்ககதரிசனம் உரைத்தார். வரப்போகிறவர் நீதி செய்கிறவராகவும், உலகைப் பாவத்திலிருந்து விடுதலை செய்து இரட்சிக்கிறவராகவும் மட்டுமல்ல, தாழ்மையின் கோலம் தரித்தவராகவும் இருப்பார். எனக்கூறியபடி அவர் தம் தாழ்மையை காண்பிக்க அரண்மனையில் பிறவாமல், மாட்டுத்தொழுவில் பிறந்தார்.
இயேசுகிறிஸ்து பிறந்து வாழ்ந்து சிலுவையில் மரிக்கு முன்பு, ஓரு கழுதையின் மேல் பவனியாக வந்து எருசலேமிற்குள் நுழைந்தார். சகரியா கூறியதில் நிறைவேறுதலை மத் 21:4-11 வரை வாசிக்கிறோம். சகரியா(9:9) கூறப்பட்டது பின்பு அப்படியே நிறைவேறியது என்று பார்க்கிறோம். இரட்சகரின் வருகையைப் பற்றி முன்னறிவித்தவர்களில் சகரியாவும் முக்கியமான தீர்க்கதரிசியாவார்.
முதல் வருகையை மாத்திரமல்ல இரண்டாம் வருகையை பற்றியும் தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறார். "கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவது போல் அந்த ஜாதிகளோடு போராடுவார் ...(சகரியா14:3,4) இவ்வாறு நம் இரட்சகரின் இரண்டு வருகையை குறித்தும் தீர்க்கதரிசனம் உரைத்துள்ளார் சகரியா. அந்த இரட்சகராகிய இயேசு எப்படிப்பட்டவர்? அவர் தாழ்மையுள்ளவர், நீதியுள்ளவர், இராஜாவாக ஏறி வந்தவர்; ஆனால் இனிமேல் வரபோகிற இராஜாவானவர், அந்தி கிறிஸ்துவின் ஆட்சியை அழித்து, பூமியின் மேல் ஆயிரம் வருடம் அரசாட்சி செய்யப்போகிறவர். நம்மை அந்த ஆட்சிக்கு தகுதிபடுத்தவே விரும்புகிறார். " அவரோடு கூட பாடுகளை சகித்தோமானால், அவரோடு கூட ஆளுகையும் செய்யலாம்." (2தீமோ 2:12)
முதலாம் வருகை, நமக்கு மீட்பை கொண்டு வந்தது. நம்முடைய பாவங்களும் சாபங்களும் கழுவப்பட, இயேசுவின் மாசற்ற இரத்தம் சிலுவையிலே சிந்தப்பட்டது. அந்த தூய இரத்தத்தால் நாம் கழுவப்பட்ட போது எவ்வளவு மகிழ்ச்சியும், சமாதானமும் பெருகியது நம் உள்ளத்தில்! நாம் இதே ஆயத்தத்தோடு இருந்தால், நாம் அவர் இரண்டாம் முறை வரும் போது அவருக்கு எதிர் கொண்டு போவோம். இதுவரை கண்டிராத பேரானந்தம் நமக்கு உண்டாகும். அவரோடு கூட நித்திய நித்தியமாய் வாழப்போகும் நமக்கு அவர் ஆயத்தம் செய்திருக்கிறவைகள் எத்தனை எத்தனையோ உண்டு. தேவன் தம்மில் அன்புகூறுகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை ." ( 1 கொரி 2:9)
ஆம் தேவன் நமக்கென்று ஆயத்தம் பண்ணினவைகளை நாம் நினைத்து கூடப் பார்க்க முடியாத படி அவைகள் உன்னதமானவைகள், உயர்ந்தவைகள், ஆகவே அவற்றை சுதந்தரிக்க ஆயத்தமாவோம். இரட்சகரின் வருகை மிக சமீபமாய் இருக்கிறது. முதல் வருகையை நினைவுகூறும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக ஆசரிப்பதோடு நின்றுவிடாமல் அவருடைய இரண்டாம் வருகைக்கும் நாம் அனைவரும் ஆயத்தப்படுவோமாக. ஆயத்தமாவோம்; மற்றவர்களையும் ஆயத்தப்படுத்துவோம்! ஆமென்!
- Mrs. புவனா தனபாலன்
ஜெபக்குறிப்பு:
பத்தாயிரம் கிராமங்களுக்கு சுவிசேஷம் அறிவிப்பதில் கிராமம் ஒன்றுக்கு ரூ.1000 கொடுக்கும் அநேக பங்காளர்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864