இன்றைய தியானம்(Tamil) 31-05.2023
இன்றைய தியானம்(Tamil) 31-05.2023
முதியோர்
"நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம் பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக." - லேவி. 19:32
St. ஜோசப் மருத்துவமனைக்கு திடீரென்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. டெலிபோன் ஆப்பரேட்டருக்கும், அழைத்தவருக்கும் இடையே நடந்த உரையாடல்:-
ஆப்பரேட்டர்: ஹலோ, யார் பேசுறது?
அழைத்தவர்: திருமதி. நார்மா பின்லே என்ற உள்நோயாளியின் உடல் நலம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு உதவுபவர் ஒருவரை அழையுங்களேன்.
ஆப்பரேட்டர்: நல்லதம்மா. நான் உங்களுக்கு உதவுகிறேன். நோயாளியின் பெயரையும், ரூம் நம்பரையும் கூறுங்கள்.
அழைத்தவர்: (நடுங்கிய குரலில்) நார்மா பின்லே, ரூம் நம்பர் 302 .
ஆப்பரேட்டர்: நர்ஸிடம் சென்று செய்தி அறிந்து வருகிறேன், காத்திருங்கள். (சில நிமிடத்தில் வந்து) அம்மா உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. பிரச்சனை எதுவும் இல்லை ரத்த பரிசோதனையில் ரத்த அழுத்தம் நார்மலாக உள்ளது என்று கூறினார். நாளை அவர்களை வீட்டிற்கு அனுப்பி விடலாம் என்று டாக்டர் கூறியதாக கூறினார்.
அழைத்தவர்: மிக்க நன்றி, நான் மிகவும் கவலையோடு இருந்தேன், நல்ல செய்தியை கூறிய உங்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக.
ஆப்பரேட்டர்: ஆமாம், நார்மா உங்கள் தாயாரா?
அழைத்தவர்: இல்லை, நான் தான் 302 இல் உள்ள நார்மா பின்லே. வயதான என்னிடம் , யாருமே எந்த தகவலும் தெரிவிக்காததால் நானே போன் பண்ணி கேட்டுக் கொண்டேன் என்றார்.
வயது முதிர்ந்தவர்கள் அசட்டை பண்ணப்படுதலை சமுதாயத்திலும், குடும்பங்களிலும் காண்கிறோம். அவர்களுடைய பேச்சுகள் கவனிக்கப்படாமலும், அவருடைய உணர்வுகள் மதிக்கப்படாமலும் இருப்பதை காண முடிகிறது. ஆனால் வேதம் முதிர் வயதுள்ளவர்களை கனம்பண்ணும்படி நமக்குக் கட்டளை கொடுக்கிறது. இதற்கு வேதத்திலே நிறைய உதாரணங்கள் உண்டு. வயது முதிர்ந்த தன் தகப்பனாகிய யாக்கோபை கனப்படுத்திய யோசேப்பு, தன் மாமியின் சொல்லைக் கேட்டு நடந்த ரூத், பர்சீலா என்னும் வயது முதிர்ந்தவரை ஆதரிக்க விரும்பிய தாவீது. ஆம், முதியோரை கனப்படுத்திய இவர்களைத் தேவன் கனப்படுத்தியதை வேதத்தில் காண்கிறோம். நாமும் நம் வீட்டில் உள்ள நம் பெற்றோரை கனப்படுத்தி வாழ்வோம். அவர்களோடு பேச நேரம் எடுப்போம். அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து ஆண்டவரின் பிரமாணத்தை நிறைவேற்றுவோம்.
- Mrs. ஜாஸ்மின்பால்
ஜெபக்குறிப்பு:
நம்முடைய பணித்தள மிஷனெரிகளை தாங்கும் குடும்பங்களை தேவன் ஆசீர்வதிக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864