இன்றைய தியானம்(Tamil) 26-05.2023
இன்றைய தியானம்(Tamil) 26-05.2023
எது வெற்றி
"தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?" - ரோமர் 8:31
ஜெர்மனி தேசத்தின் பேரரசர் மகா பேட்டரிக் பெர்லின் நகர்வழியாக சென்று கொண்டிருந்தார். அங்கு ஒரு மக்கள் கூட்டம் சுவரில் உள்ள ஒரு படத்தை முந்தி அடித்துக்கொண்டு பார்த்துக் கொண்டிருந்தது. பேரரசரும் அது என்னவென்று கூர்ந்து கவனித்தார். அங்குள்ள சுவரில் யாரும் கிழிக்க முடியாத உயரத்தில் அவருடைய உருவப்படம் மிகவும் இழிவான கேலிச்சித்திரமாக வரையப்பட்டு மாட்டி இருந்தது. அவரோ ஒரு கணம் அதை நோக்கினார். உள்ளத்தில் வேதனை முள்ளாக குத்தியது. பின் தனது பணியாளரைப் பார்த்து அதை எல்லாருக்கும் தெரியும்படி கீழே இறக்கி வை என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அவரை இழிவுபடுத்த எண்ணிய பகைவர் கூட்டம் வெட்கி தலை குனிந்தது.
பிரியமானவர்களே! நீங்களும் கூட உங்கள் குடும்பத்திலோ வேலை ஸ்தலத்திலோ கிறிஸ்துவின் நிமித்தம் புறக்கணிக்கப்பட்டு இழிவுபடுத்தப்படலாம். அவமானத்தின் வழியாய்க் கடந்து செல்லலாம். வீணான அவதூறுகளினால் உங்கள் உள்ளம் புண்ணாய் காணப்படலாம். மிகவும் வேதனையான இந்த அனுபவத்திற்காகவும் தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். இதை உங்கள் ஆவிக்குரிய வாழ்வின் முன்னேற்றத்திற்காகவே தேவன் அனுமதித்துள்ளார் என பொறுமையோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது இந்த சூழ்நிலை மூலம் உங்களை சோர்வடையச் செய்ய நினைத்த பிசாசு தோற்றுப் போவான், வெற்றி உங்களுக்கு!
நீங்கள் தேவனுக்கென்று உண்மையாய் ஊழியம் செய்த போதிலும் பிறருடைய கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகும் போது தேவன் நிமித்தம் அதை பொறுமையாய் சகிப்பீர்களென்றால் அதுவே உங்களுக்கு வெற்றி.
நீங்கள் பாடுகளின் வழியாய் கடந்து செல்லும்போதும் கிறிஸ்துவின் நிமித்தம் வரும் சிலுவையை சுமக்கும் போதும் தேவனைக் குறித்து முறுமுறுக்காமல் "சோதனையை சகிக்கிற மனுஷன் பாக்கியவான்" (யாக்கோபு 1:12) என்ற வசனத்தை நினைவுகூர்ந்து வாழ்வீர்களானால் அதுவே உங்களுக்கு வெற்றி.
இறுதியாக இனிமையான நேரங்களை விட கடினமான நேரங்கள் மூலம் ஆண்டவர் இன்னும் அதிகமாக உங்களுக்கு போதிக்கவும் உங்களை உருவாக்கவும் முடிகிறது என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் நொறுக்கப்படும் வேளையில் இன்னும் ஆழமாக அவரது சாயலை பெறும்படி நெருங்கி வருகிறீர்கள் என்றும் அவரால் பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்படுகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
- S. பரமசிவன்
ஜெபக்குறிப்பு:
நம் பணித்தளங்களில் பசித்தோருக்கு உணவளிக்கும் திட்டம் மூலம் சந்திக்கப்படும் ஆத்துமாக்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864