இன்றைய தியானம்(Tamil) 09.02.2025 (Kids Special)
இன்றைய தியானம்(Tamil) 09.02.2025 (Kids Special)
ரகுவின் பேராசை
"...உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்;..." - எபி 13:5
அம்மா, அம்மா ரொம்ப பசிக்குது சீக்கிரமா சாப்பாடு கொண்டு வாங்க என்றான் ஜெகன். அம்மா தளர்த்த குரலில் இதோ கொண்டு வருகிறேன் என்று சொல்லி கொஞ்சம் பழைய சோறும், ஊறுகாயும் கொடுத்தார்கள். ஜெகனோ அம்மாவிடம் வேறு எதுவும் இல்லையாம்மா என்று கேட்க, கலங்கிய கண்களுடன் அம்மா இல்லப்பா என்றாள். ஜெகனும் சாப்பிட்டு விட்டு விளையாட போய் விட்டான். அவனுடைய அப்பா, அம்மா எங்கு வேலைக்கு செல்வது என்று யோசித்து கொண்டிருந்தார்கள். ஏனென்றால் அந்த கிராமம் பயங்கர வறட்சியான கிராமம். அந்த ஊரில் உள்ள எல்லா ஆண்களும் பிழைப்பைத் தேடி வேறு ஊருக்குத் தான் செல்வார்கள்.
ஜெகனின் அப்பா ரகுவும், வேலை தேடி ஒரு ஊருக்குச் சென்றார். அங்குள்ள தலைவரிடம் போய் வேலை கேட்டார். அவரும் சரி என்று சொல்லி மறுநாள் அதிகாலை சில நபர்களையும் ரகுவையும் வெளியே அழைத்துச் சென்று நீ இன்று மாலை சூரியன் மறைவதற்குள் எவ்வளவு தூரம் நடந்து திரிகிறாயோ அந்த இடத்தையெல்லாம் நீயே உனக்கு சொந்தமாய் வைத்துக் கொள்ளலாம். அதில் விவசாயம் பண்ணி, குடும்பமாக சந்தோஷமாய் இருக்கலாம். இது இந்த ஊரின் நிபந்தனை. இங்கு பிழைப்புத் தேடி வருகிற எல்லோருக்கும் அப்படித்தான் செய்வோம். But என்ன ஒரு நிபந்தனை சூரியன் மறைவதற்குள் இங்கு வந்து விட வேண்டும். நான் இங்கு தான் இருப்பேன். அப்படி வரவில்லை என்றால் எதுவும் கிடைக்காது என்றார்.
ரகுவும் சரி என்று சொல்லி நடக்க ஆரம்பித்தார். நடந்த கொஞ்ச தூரத்தில் நீளமான தோகையை விரித்தபடி ஒரு தென்னந்தோப்பு தெரிந்தது. அதின் மேல் ஆசைப்பட்டு அங்கு ஓடினான். அதற்கு அப்பால் நல்ல செழிப்பான மாந்தோப்பு. அங்கும் ஓடினான். அதையும் தாண்டி பச்சை பசேலென ஒரு வயல் நிலம், அருகிலேயே சலசல வென்ற சத்தத்துடன் நீரோடை! அங்கும் ஓடுகிறான். அங்கு போகும்போதே இருட்டிவிட்டது. சூரியனும் மறைந்து விட்டது. இப்பொழுது தலைவர் இருக்கும் இடத்திற்கு வேகமாய் ஓடி வருவதற்குள் மயங்கி விழுந்து விட்டான். தலைவர் கூறினார், உன் பேராசையால் நீ போன இடத்தை எல்லாம் இழந்து விட்டாய். இனி உனக்கு இங்கும் ஒன்றுமில்லை ஓடிப் போய் விடு என்றார்.
தம்பி தங்கச்சி பார்த்தீங்களா, அந்த ரகு Uncle தென்னந்தோப்பையும், மாந்தோப்பையும் வைத்து நல்லா வாழ்ந்திருக்கலாம். ஆனா பேராசையாலே இப்போ எல்லாத்தையும் இழந்திட்டாரு. நீங்களும் இயேசப்பா உங்களுக்கு தந்தத வச்சி சந்தோஷமா வாழ கத்துக்கணும். கண்ணுல பார்க்கிறதெல்லாம் வாங்கணும்னு நினைக்கக் கூடாது. O. k வா.
- Mrs. சாராள் சுபாஷ்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864