Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 19.01.2025 (Kids Special)

இன்றைய தியானம்(Tamil) 19.01.2025 (Kids Special)

 

முதலிடம் இயேசுவுக்கே

 

"கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்" - சங். 105:4

 

என் அன்பு சிறு பிள்ளைகளே! நீங்க Jesus- ஐ அதிகமா நேசிக்கிறீர்களா, அல்லது இந்த உலகத்தையா? என்று எப்படி கண்டுபிடிக்க முடியும் தெரியுமா? ஓ.... தெரியாதா Ok..Ok.. வாங்க story மூலமா தெரிந்து கொள்ளலாம்.

       

சீனாவுக்கு மிஷனெரியாக சென்ற எரிக்லிடில் என்ற வாலிபர் தன் இளம் வயதிலேயே விளையாட்டுத் துறையில் வெற்றி மேல் வெற்றி பெற்றார். இதற்குக் காரணம் என்ன தெரியுமா? தன் சிறு வயதிலிருந்தே ஆண்டவருக்கு முதலிடம் கொடுத்ததுதான். அப்படி என்னதான் அவர் செய்தார் என்று தானே நினைக்கிறீங்க. Sunday அன்றைக்கு School- ல விளையாட்டு போட்டி, சிறப்பான எந்த நிகழ்ச்சி நடந்தாலும் முதலில் இயேசப்பாவுக்கு முதலிடம் கொடுத்து ஆலயத்திற்குத் தான் செல்வார். இப்படி உலக வேலையை விட இயேசப்பாவை சந்தோஷப்படுத்த தான் நினைப்பாங்க எரிக் அண்ணா. 1924- ம் வருடம் பிரான்ஸ் தேச தலைநகர் பாரீஸில் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எரிக்லிடில் ஓடும்படி ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார். ஆனால் மிகப் பெரிய ஏமாற்றம் காத்துக்கொண்டிருந்தது. அந்த போட்டி ஆலயத்திற்கு செல்ல வேண்டிய ஞாயிற்றுக்கிழமையில் இருந்தது. உலகப் புகழா? தேவனுக்கு முதலிடம் கொடுத்து அவருக்கு கீழ்ப்படிவதா? மனதிலே ஒரே போராட்டம். நீங்களா இருந்தா என்ன செய்திருப்பீங்க குட்டீஸ்? எரிக் என்ன செய்தார் தெரியுமா? தன்னுடைய சந்தோஷத்தை விட, ஆண்டவரை பிரியப்படுத்த விரும்பினார். ஞாயிறு ஆராதனைக்கு சென்றுவிட்டு ஓட்டப்பந்தயத்தை புறக்கணித்தார். எல்லாரும் அவரை கேலியாக பேசினாங்க, நல்ல வாய்ப்பை இழந்து விட்டாயே என்று சிலர் அறிவுரையும் சொன்னார்கள். எரிக் கவலைப்படாமல் தான் எடுத்த தீர்மானத்தில் உறுதியாய் இருந்தார். ஆண்டவர் சும்மா இருப்பாரா எரிக் அண்ணனுக்கு ஒரு புதிய வழியை உண்டாக்கினார். மற்றொரு நாளில் நடந்த 400 மீட்டர் ஓட்டத்தில் ஓடி தங்கப்பதக்கம் பெற்று உலக சாதனை புரிய தேவன் உதவி செய்தார். ஆண்டவருக்கு முதலிடம் கொடுத்ததால், எரிக் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய ஆசீர்வாதங்கள் என்பதை மற்ற ஜனங்களெல்லாம் அறிந்து கொண்டார்கள்.

         

பின் நாட்களில் தேவனுக்கென்று முழு நேர மிஷனெரியாக பணியாற்றும் பொழுது, இயேசு கிறிஸ்துவின் மீது தான் கொண்ட அன்பையும், அவர் கட்டளைக்கு கீழ்ப்படிந்ததால் கிடைத்த வெற்றியையும் மக்களிடம் அறிவிக்கும் போது, அநேகர் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர்.

        

அன்பு செல்லங்களே! எரிக் அண்ணன் இயேசப்பாவுக்கு முதலிடம் கொடுத்ததால் அவர் மட்டுமல்ல, அவர் மூலமாய் அநேக ஜனங்கள் ஆசீர்வதிக்கப்பட்டார்கள். நீங்களும் "என் முதலிடம் இயேசுவுக்கு மட்டுமே" என்று தீர்மானம் எடுத்துப் பாருங்கள். சிறந்த ஆசீர்வாதங்கள் உங்களை தேடி வரும். என்ன குட்டீஸ் ready- யா?

- Mrs. பிரிசில்லா தியோபிலஸ்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)