இன்றைய தியானம்(Tamil) 04.12.2024
இன்றைய தியானம்(Tamil) 04.12.2024
யாரோ ஒருவர்
"…அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்?..." - ரோமர் 10:14
பிறவியிலிருந்தே பார்வையில்லாத ஒருவர் தெரு ஓரத்தில் அமர்ந்து பிச்சை கேட்டுக் கொண்டிருக்கிறார். இயேசு வருகிறார் என்ற செய்தியை கேள்விப்பட்டவுடன் தன்னை விட்டு கடந்து போய்விடக் கூடாது என்று "இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்" என்று மிகுந்த சத்தமிட்டு கூப்பிட்டார். இயேசு நின்று நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார். நான் பார்வையடைய வேண்டும் என்கிறார். இயேசுவும் "உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது" என்று கூறின உடனே அவர் பார்வையடைகிறார், இது எப்படி கண்கள் தெரியாத ஒருவரால் விசுவாசிக்க முடிந்தது? யாரோ ஒருவர் இந்த பார்வையற்றவரிடம் இயேசுவைக் குறித்து சொல்லியிருக்கிறார். அதுமுதல் அவருக்குள் விசுவாசம் உருவானது. அவரை நான் எப்போதாவது சந்திக்க நேர்ந்தால் அந்த சந்தர்ப்பத்தை நழுவ விட மாட்டேன் என எண்ணிக் கொண்டார். எனவே தான் தன்னை விட்டு இயேசு கடந்து சென்று விடக்கூடாது என்ற ஆதங்கத்தோடு உரத்த சத்தமாய் கூப்பிட்டு அற்புதத்தை பெற்றுக் கொள்கிறார்.
இதைப் போலத்தான் கிராம மிஷனெரி இயக்கத்தின் நிறுவனராய் இருக்கிற சகோதரர் டேவிட் கணேசன் அவர்களுக்கு, அவர்கள் வசிக்கிற புல்லலக்கோட்டை கிராமத்தில் இயேசுவை குறித்து சொல்லியிருக்கிறார்கள். எனவே தான் தனக்கு வந்த இருதய வியாதியை இயேசு சுகமாக்குவார் என்று விசுவாசித்தார். இயேசுவை நோக்கி கூப்பிட்டார். சுகத்தைப் பெற்றுக் கொண்டு இயேசுவை குறித்து சொல்லும்படி கிராமங்களுக்கு ஊழியத்திற்கு போனார். இன்றைக்கு 7000 மிஷனெரிகள், ஒரு லட்சம் கிராமங்கள் இயேசுவுக்கு சொந்தமாக வேண்டும் என்ற தரிசனத்தோடு ஊழியம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
யாரோ ஒருவர் இயேசுவை குறித்து உங்களிடத்தில் சொன்னதினாலே நீங்கள் இரட்சிக்கப்பட்டுள்ளீர்கள். சுகத்தைப் பெற்றிருக்கிறீர்கள். எனவே நீங்களும் அந்த யாரோ ஒருவராய் மாறுங்கள். ஆண்டவரை அறியாத ஜனங்களிடத்தில் இயேசுவின் நாமத்தை சுவிசேஷமாய் அறிவியுங்கள். உங்கள் மூலமாய் இயேசுவை அறியாத ஜனங்கள் இரட்சிக்கப்படட்டும்.
- Bro. வேணு வில்லியம்ஸ்
ஜெபக்குறிப்பு:
ஒவ்வொரு மாநிலத்திலும் 10 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு நம் வளாகத்தில் செய்யப்படும் ஊழியங்கள் செய்யப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864