இன்றைய தியானம்(Tamil) 01.11.2024
இன்றைய தியானம்(Tamil) 01.11.2024
தெரிந்ததைச் சொல்
"சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்படவேண்டும்" - மாற்கு 13:10
நான் ஆண்டவரை ஏற்றுக்கொண்ட புதிதில், ஆண்டவரை அழுகிறவராய் தரிசனத்தில் கண்டேன். அவர் கண்ணீரைத் துடைக்க அருகிலுள்ள கிராமத்திற்குச் சென்று தேவன் எனக்கு செய்த நன்மையை சொல்லி, அவர் நல்லவர் என அறிவித்து வந்தேன். ஒருநாள் ஒரு அக்கா "லட்டு ஏம்மா இனிக்குது?" என்ற பாடலை சிறுவர்களுக்கு கற்றுக் கொடுத்தாங்க. பாட்டு முடிந்ததும் கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள் என்ற வசனத்தையும் கற்றுக் கொடுத்தாங்க. பாடல் எளிமையாக இருந்ததால் அதை நான் கற்றுக் கொண்டேன். எனக்கு மனதில் ஒரே சந்தோஷம். என்னவென்றால் எனக்கு ஒரு பாடல், வசனம் தெரிந்து விட்டது. இப்போது மறுநாள் ஊழியத்திற்கு சென்ற இடத்திலெல்லாம் சிறுவர்களைக் கூட்டி லட்டு பாடல், ஒரு கதை, வசனம் கற்றுக் கொடுத்தேன். அன்று ஊழியம் முடித்து வீட்டிற்கு வந்ததும் ஒரே சந்தோஷம்.
பிரியமானவர்களே! உங்களுக்கு எத்தனை பாடல்கள், கதை தெரியும்? பைபிளில் உள்ள எத்தனை சம்பவங்கள் தெரியும்? எத்தனை முறை வேதத்தை வாசித்துள்ளீர்கள்? ஆனால் அதை மற்றவர்களோடு பகிர்ந்துள்ளீர்களா? மற்றவர்களுக்கு இயேசுவின் அன்பை பற்றி அறிவிக்காமல் நாம் இருப்போமானால், நாம் அவர்களைக் குறித்து தேவனிடத்தில் கணக்கு கொடுக்க வேண்டும். தேவன் பிலிப்பை வனாந்தரத்திற்கு கொண்டு செல்கிறார். அங்கு ஒரு இரதம் வருகிறது. அதில் ஏறிக்கொள் என்கிறார் தேவன். பின்சென்று ஏறுகிறார் பிலிப்பு. அங்கு ஏசாயா நிருபம் வாசிக்கப்படுகிறது, கந்தாகே மந்திரிக்கு புரியவில்லை. உடனே பிலிப்பு தன்னை தேவன் கொண்டு வந்த நோக்கத்தை அறிந்து, தனக்குத் தெரிந்த காரியங்களை சொல்கிறார். கந்தாகே மந்திரி உள்ளத்தில் தேவன் கிரியை செய்கிறார். அவர் ஆண்டவரை ஏற்றுக்கொள்கிறார். பிலிப்பு ஞானஸ்நானம் கொடுக்கிறார். தேவன் உடனே அவரை வேறு இடத்திற்கு எடுத்து செல்கிறார். இதேபோல உங்கள் வீட்டுன் அருகில், உங்களை சுற்றி தேவனை அறியாதவர்கள் இருப்பார்கள் என்றால் தேவனைப் பற்றி அறிவிக்கவே தேவன் உங்களை அங்கு வைத்திருக்கிறார். அவர் சித்தம் நிறைவேற்றுங்கள். எப்படி சுவிசேஷம் சொல்வதென்று தெரியவில்லையே என நினைக்காதீர்கள். தேவன் உங்களுக்கு செய்ததை, உங்களுக்குத் தெரிந்ததை பிறருக்குச் சொல்லுங்கள். கிரியை செய்கிறவர் தேவன்.
சுவிசேஷம் அறிவிப்பது ஒவ்வொரு கிறிஸ்தவனின் கடமை. அதோடு மாத்திரமல்ல நீங்கள் உலகமெங்கும் புறப்பட்டுப் போங்கள். இதோ, உலகத்தின் முடிவு பரியந்தமும் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என வாக்குத்தத்தம் கொடுக்கிறார். நீங்கள் புறப்பட்டுப் போகும்போது தான் அந்த வாக்குத்தத்தம் சொந்தமாகும். நாங்கள் கிறிஸ்மஸ்க்குள்ளாக 25,000 கிராமங்களை சந்திக்க வேண்டும் என திட்டமிட்டு புறப்பட்டுச் செல்கிறோம். இப்படிப்பட்ட பாரமுள்ள நீங்களும் எங்களோடு இணைந்து சுவிசேஷம் அறிவிக்கலாம். வாரத்தில் சனி, ஞாயிறு என இரு நாட்கள் எங்களோடு இணைந்து சுவிசேஷ ஊழியம் செய்யலாம். வாருங்கள் தேவ ஆசீர்வாதம் பெறுங்கள்.
- Bro. டேவிட் கணேசன்
ஜெபக்குறிப்பு:
இம்மாத ஊழியங்களுக்காக மற்றும் ஊழியர்களின் சுகத்திற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864