Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 27.10.2024 (Kids Special)

இன்றைய தியானம்(Tamil) 27.10.2024 (Kids Special)

 

வைராக்கியமுள்ள வனிதா

 

"அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்" - சங்கீதம் 91:14

 

உயரமான மலைகளும், அழகிய புல்வெளிகளும், கண்ணைக் கவரும் நீரோடைகளும் உள்ள அந்த கிராமத்தில் தான் வனிதா என்ற குட்டி பெண் வசித்து வந்தாள். அவளுக்கு அண்ணன், அக்கா எல்லாரும் உண்டு. வனிதா மூன்று வயது சிறுமியாக இருந்தபோது, அவளது தாயார் இறந்து விட்டார்கள். எனவே அவளது அப்பா, அண்ணன், அக்கா எல்லாரும் அவளை செல்லமாக வளர்த்தார்கள். வனிதா வளர்ந்து பெரியவளாகி சண்டே ஸ்கூல் செல்ல ஆரம்பித்தாள். இயேசுவின் அன்பினால் நிரப்பப்பட்டு இன்னும் அதிக வாஞ்சையோடு இயேசுவை தேட ஆரம்பித்தாள். ஊரில் ஒரு கோயில் உண்டு. அந்த ஆலயமணி அடிப்பதற்குள், தான் எழும்பி ஜெபித்து விட வேண்டும் என்ற வைராக்கியம் அவளுக்குள் வந்தது. அதன்படியே எழுந்து ஜெபித்து விடுவாள்.   

 

சிறு வயதிலேயே இயேசுவை வாஞ்சையோடு தேடுகிற பெண்ணாக இருந்ததினால் இவளை அவள் ஊரில் உள்ள எல்லோருக்கும் பிடிக்கும். வனிதா பத்தாம் வகுப்பு வரை படித்தாள். மேற்படிப்பைத் தொடர அவள் வீட்டில் வசதி இல்லாததால் படிப்பை நிறுத்திவிட்டார் அவள் அப்பா. அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. பின்பு அவளுடன் படித்த மற்ற மாணவர்கள் அவளை எஸ்.எஸ்.எல்.சி என்று கேலி பண்ணினார்கள். இதனால் மனமுடைந்தவளாய் இன்னும் அதிகமாய் இயேசுவை தேட ஆரம்பித்தாள். இயேசப்பா அவளின் ஜெபத்தை கேட்டார். அவள் ஜெபித்த சில நாட்களுக்குள் வெளிநாட்டிலிருந்து ஒரு லெட்டர் வந்தது. அது யாரென்றல் , அவளது அப்பாவின் சிறு வயது நண்பர். வனிதாவை நான் படிக்க வைக்கிறேன் என்றும், படிப்பிற்கான செலவையும், செலவிற்கு தேவையான பணத்தையும் அனுப்பி வைத்தார்கள். வனிதாவிற்கு ஒரே சந்தோஷம். மறுபக்கம் பயங்கர ஆச்சரியம் தலைகால் புரியாமல் குதித்து தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தி இயேசப்பாவிற்கு ரொம்ப நன்றி செலுத்தினாள். மற்றும் ஸ்கூலில் சேர்ந்து படிப்பை முடித்து ஊழியத்திற்கென்று தன்னை முழுமையாக அர்ப்பணித்தாள். அநேக கிராமங்களுக்கு சென்று சுவிசேஷம் அறிவித்தாள். அது மட்டுமல்லாது, வட மாநிலங்களுக்கும் சென்று மொழியை கற்றுக் கொண்டு இயேசுவை அறிவித்தாள். அவள் சிறுவயதில் இயேசுவின் மீது காட்டின வாஞ்சையும், வைராக்கியமும் தான் அவளுக்கு சரியான நேரத்தில் எதிர்பாராத இடத்திலிருந்து நன்மையை கொண்டு வந்தது, உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டாள்.    

 

குட்டி தம்பி, தங்கச்சி! வனிதாக்காவைப் போல இயேசுவை வாஞ்சையாய் தேடுகிற சிறுவர்களைத் தான் இயேசப்பா தேடிக் கொண்டிருக்கிறார். நீயும் அப்படி மாறிடு. உன்னையும் இயேசப்பா சிறந்திருக்கும்படி செய்வார். ஓ.கே. 

- Mrs. சாராள் சுபாஷ்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)