Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 15.04.2024

இன்றைய தியானம்(Tamil) 15.04.2024

 

உணர்வில்லாத இருதயம்

 

"அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும்அடைக்கப்பட்டிருக்கிறது." - ஏசாயா 44:18

 

இரண்டு நண்பர்கள் சாயங்கால வேலையில் வீட்டிற்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தனர். திடீரென்று தூரத்தில் மாடிவீடு ஒன்றிலிருந்து அளவுக்கு அதிகமான புகை வருவது தெரிந்தது. உடனே அவர்கள் சற்றும் தாமதிக்காமல் புகைவந்த திசையை நோக்கி வேகமாகச் சென்றனர். மாடி வீட்டின் மேற்கூரை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உட்பக்கமாகத் தாழிடப்பட்டிருந்த கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்ட அறைகள், விலையுயர்ந்த தரைவிரிப்புகள் என்று அழகாக காணப்பட்டது. யாராவது உள்ளே இருக்கிறீர்களா? என்று கூப்பிட்டுக் கொண்டே ஒவ்வொரு அறையாகச் சென்றனர். ஒரு பதிலுமில்லை. ஒரே ஒரு அறையை மட்டும் இன்னும் பார்க்கவில்லை. கதவைத் தள்ளித்திறந்தால் வெளியே என்ன நடக்கிறதென்று தெரியாமலேயே முழுக்குடும்பமும் தொலைக்காட்சிப் பெட்டி முன் உட்கார்ந்து கண்சிமிட்டாமல் நிகழ்ச்சியைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள். தொலைக்காட்சிப் பெட்டியின் தொடர்பைத் துண்டித்து விட்டு "சீக்கிரமாய் வெளியேறுங்கள், உங்கள் வீட்டின் மேல்தளம் தீப்பற்றி எரிகின்றது என்று கத்தினர். துரிதமாக எல்லோருமாக சேர்ந்து முக்கியமான பொருட்களை வெளியே எடுத்துக் கொண்டு சென்றனர். பின் தீயணைக்கும் படை வந்து சேர்ந்தது. தீ அணைக்கப்பட்டது. வீட்டில் தீப்பிடித்த போதோ கதவை உடைத்தபோதோ, மனித காலடிச் சத்தம் எதையும் கவனிக்காமல் டிவி பார்த்துக் கொண்டிருந்த குடும்பத்தினர் ஊர் மக்களை பார்க்க வெட்கப்பட்டனர்.

 

இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம் பண்ணி, மோவாபின் சமமான வெளிகளில் பாளையமிறங்கினபோது மோவாபின் ராஜாவான பாலாக், இஸ்ரவேல் ஜனங்களை சபிக்கும்படி கூலி கொடுத்து, பிலேயாமை அழைத்து வரச் சொல்கிறார். கீழ்ப்படிதலுள்ள இருதயமுள்ள பாலாக் அவர்களுடன் செல்ல ஆயத்தப்பட்டார். கழுதையின் மேல் சேணங்கட்டி வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்ற தூதனைக் கூட காணக்கூடாமல் உணர்வில்லாத இருதயமாக செல்கிறார். ஆனால் பிலேயாம் சென்ற கழுதை தாறுமாறாக சென்றவுடன் கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார். கழுதையை மூன்று முறை அடிக்கிறாரேயொழிய ஏன் இப்படி நடக்கிறது என சிந்திக்கவில்லை.

 

இதை வாசிக்கின்ற பிரியமானவர்களே! அநேகர் இன்றைக்கு இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது? என்ற உணர்வே இல்லை. எதைப் பற்றியும் யோசிப்பது கிடையாது. தாங்கள் செய்வதை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்கள். எது எங்கே நடந்தால் எனக்கென்ன? எத்தனை ஆபத்து சுற்றி இருந்தாலும் இந்த நிமிடம் நன்றாயிருந்தால் போதும். எதைப்பற்றியும் கவலையில்லை என்று வாழ்ந்தால் இருதயத்தின் உணர்வு மெல்லமெல்ல குறைந்து பின் மனசாட்சி செத்துப் போய் உலர்ந்து போன நிலையே காணப்படும். எச்சரிக்கையாயிருப்போம்.

- Sis. பாத்திமா

 

ஜெபக்குறிப்பு: 

சுவிசேஷ முகாம் மூலம் சந்திக்கப்பட்ட கிராமங்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)