Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 30-05.2023

இன்றைய தியானம்(Tamil) 30-05.2023

 

புகழ்ச்சி 

 

“வீண் புகழ்ச்சியை விரும்பாமலும் ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்” – கலா. 5:26  

 

சில வருடங்களுக்கு முன், மிஷனெரி பயோகிராபி அடங்கிய மாத இதழில் ஒரு செய்தி இப்படியாக வெளியிடப்பட்டது. லண்டன் மிஷனெரி சங்கம் தென்னாப்பிரிக்காவில் உள்ள தனது பணித்தளத்தில் பணியிடமாற்றம் காரணமாக ஒரு புதிய மிஷனெரியை பணியில் அமர்த்தியது. அம்மிஷனெரிக் குடும்பம் கப்பல் மூலம் தென்னாப்பிரிக்கா சென்றதும் கடற்கரையில் பணித்தள விசுவாசிகள் சிறப்பாக வரவேற்பு கொடுத்தனர். மேளதாள வாத்தியங்களோடு, பூக்களை அள்ளி வீசியும், நடனமாடியும் அவர்களை வரவேற்றனர். இவற்றை கண்ணுற்ற முந்திய மிஷனெரி மிகவும் விசனமடைந்தார். அவருடைய இருதயம் புலம்ப ஆரம்பித்தது. இப்பணித்தளத்தை ஆரம்பித்ததே நான் தான், காடு, மலை என அலைந்து, இம்மக்களை இரட்சிப்புக்குள் வழி நடத்தியுள்ளேன். இவ்வளவு இருக்க என் கனம் எங்கே? என்று அங்கலாய்த்தார். இவ்வெண்ணங்கள் இவரை ஊழியத்தில் பின்னடையச் செய்தது.

 

பிரியமானவர்களே! மனுஷர்கள் கனம் பண்ண வேண்டும். சமுதாயத்தில் எனக்கென்று ஒரு அந்தஸ்து வேண்டும் என்ற எண்ணத்தோடு நாம் காணப்படுவோமானால், வேதம் நமக்கு அன்பாக ஆலோசனை கூறுகிறது. "தற்புகழை நாடுவதும் புகழல்ல" (நீதி.25.27) "யாரும் என்னைக் கண்டு கொள்ளவில்லையே நான் இந்த காரியத்துக்காக எவ்வளவு பாடுபட்டேன் இவர்களுக்கு நன்றியே இல்லையே" என அங்கலாய்க்கும் இருதயம் தேவனுக்கு முன் சரியானது அல்ல. நான் செய்த நற்காரியங்களுக்காக அனைவரும் நம்மை புகழ வேண்டும் என்று எண்ணி எதிர்பார்க்கும் போது நீங்கள் செய்த நற்காரியங்களுக்கான பலனை மக்களிடமே பெற்றுக் கொண்டு விட்டீர்கள்.

தேவன் அதற்கான ஆசீர்வாதத்தைக் கொடுக்க அவருக்கு இடமளிக்கவில்லை. அதுபோல பிறர் புகழப்படும் போதும் உங்கள் மனம் எரியக்கூடாது. பொறாமையின் விளைவால் ஏற்படும் இந்த செயலும் பாவமே. ஆகவே புகழை எதிர்பார்த்து எந்த செயலையும் செய்யாதீர்கள். உங்கள் மனம் புகழின் பக்கம் சாயாமல் இருக்கும் போது தேவன் இம்மையிலும், மறுமையிலும் அதற்குரிய பலனை தவறாமல் செய்வார்.

- P. ஜேக்கப்சங்கர்   

 

ஜெபக்குறிப்பு: 

தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிஸா, சட்டீஸ்கர் ஆகிய வடமாநில பணித்தளங்களில் நடைபெறும் ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)