Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 28-05.2023 (Kids Special)

இன்றைய தியானம்(Tamil) 28-05.2023 (Kids Special)

 

ரசனையான விருந்தினர் 

 

“...வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு” - பிரசங்கி 3:1

 

Bro. சேகர் குடும்பம் இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட குடும்பம். கணவன்-மனைவி, மகன், மகள் என்ற அளவான குடும்பம். ஒவ்வொரு நாளும் குடும்ப ஜெபம், வேதவாசிப்பு, தியானம், வசனம், மனப்பாடம் செய்தல் கட்டாயம் உண்டு. குடும்பமாய் பாடி ஆண்டவரை மகிமைப்படுத்துதல், ஞாயிறு ஆராதனை, சிறுவர் ஓய்வுநாள் வகுப்பு என ஒன்றுக்கும் பிள்ளைகள் தவறவே மாட்டார்கள். அக்குடும்பத்தை ஆண்டவர் மிகவும் ஆசீர்வதித்தார். சந்தோஷம் பொங்கி வழிந்தது.

 

அப்பா ஒருநாள் ரசனையான விருந்தினர் ஒருவரை வீட்டிற்கு அழைத்துவந்தார். அப்பா இருக்கும்போது மட்டும்தான் அவர் எல்லோரோடும் இருப்பார், பேசுவார். மற்றபடி எல்லா குடும்ப காரியங்களும் முன்போல ஒழுங்காக நடந்துகொண்டிருந்தது. ஆனால் எல்லோரோடும் அவ்விருந்தினர் நன்றாக பழகியபின் காலையில் எழுந்தவுடனே குடும்பத்தாருடன் பேச ஆரம்பித்துவிடுவார். அவர்களுக்கு நேரம் போவதே தெரியாது. காலை பாடல், ஜெபம், வேதம் என்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. அவர் தொடர்ந்து அவர்களிடம் பழகப் பழக அவருடன் அதிகநேரம் செலவு பண்ணுவது அவர்களுக்கு ரொம்பப் பிடித்துப் போய்விட்டது. ஒரு சில நாட்களில், பிள்ளைகள் படிக்க வேண்டிய நேரங்களிலும் விருந்தினரோடு படுகுஷியாக நேரத்தை செலவிட்டு படிப்பையே மறந்துவிட்டார்கள். இரவு சாப்பிடும்போதும் விருந்தினர் கூடவேயிருப்பார். ஆகவே குடும்பமாக அன்றைய தினம் ஊரில் நடந்த காரியங்கள், விபத்துக்கள், அரசியல் நிலவரம் என்று சொல்லி அலசி ஆராய்ந்து நேரம் போவதே தெரியாமல் பொழுது போய்விடும். இரவு ஜெபம் போயே போய்விட்டது. புதிய விருந்தாளி குடும்பத்தையே தன் பக்கமாக திருப்பிவிட்டார். தேவனை, மனிதர்களை, குடும்பத்தை மறக்க வைத்து விட்டார். ஆலயம் போவதும் லேட்டாகி, சில நாட்கள் இல்லாமலே போய்விட்டது. ஓய்வுநாள் பள்ளி மறந்தே போய்விட்டது.

 

யார் இந்த ரசனையான விருந்தாளி? ? வேறு யாருமல்ல, Mr. T. V. தான். தேவனுக்குக் கொடுக்கவேண்டிய காலை நேரம், குடும்பத்தில் ஒருவரோடொருவர் பேசி உதவி செய்து செலவிடவேண்டிய நேரம், ஆலயம் சென்று தேவனை மகிமைப்படுத்த வேண்டிய நேரம் என எல்லா நேரத்தையும் தன்வசமாக்கிக்கொண்டார் Mr. T. V. வீட்டில் சண்டைகளும், மனஸ்தாபங்களும் வர ஆரம்பித்தன. அப்பா தீவிரமாய் யோசித்தார். பிள்ளைகளின் பேச்சு கூட Cartoon ல் பேசுவதைப் போல் இருப்பதைக் கண்டார். பிள்ளைகள் கடவுள் பயத்திலும் படிப்பிலும் பின்தங்கியதைக் கண்டார். ஒரு நல்ல முடிவெடுத்தார். விருந்தாளியை அட்டைப்பெட்டிக்குள் வைத்து விற்பதற்காக கொண்டுபோகும் நேரம் குடும்பமே கவலையில் மூழ்கியது. ஆனால் மீண்டும் ஓரிரு நாட்களில் இயல்பு நிலை திரும்பியது. வீட்டில் பாடல் சத்தமும், வாய்ப்பாடு சத்தமும் எதிரொலிக்க ஆரம்பித்தன. 

 

குட்டி செல்லமே! நீ T. V. க்கு அடிமையாகிவிடாதே. T. V. யோடு முழுநேரத்தையும் செலவிடாதே. T. V. பார்ப்பதில் மிகுந்த கவனமாயிரு. கொஞ்சநேரம் நல்ல பயனுள்ள நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு Off பண்ணிவிடு சரியா! அதுதான் எப்போதுமே நல்லது.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)