Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 27-05.2023

இன்றைய தியானம்(Tamil) 27-05.2023

 

யார் ஆவிக்குரியவன்?  

 

“...ஆவிகேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்” - கலாத்தியர் 5:16

 

யார் ஆவிக்குரிய கிறிஸ்தவன் என்ற கேள்விக்கு ஒவ்வொரு கிறிஸ்தவ வட்டாரத்திலும் வித்தியாசமான கருத்துக்கள் நிலவுகின்றன. சில ஐக்கியங்களில் உற்சாகமாய் பாடல் பாடி அல்லேலூயா என்று முழக்கமிடுபவர்கள் ஆவிக்குரியவர் என்று எண்ணப்படுகின்றனர். சில நேரங்களில் நீண்ட ஜெபம் செய்பவர்களை ஆவிக்குரியவர்களாக எண்ணுகின்றனர்.

 

மேற்கண்ட காரியங்கள் ஒரு ஆவிக்குரிய மனிதனின் அடையாளமாக இருந்தாலும் இவைகள் வெளிப்படையான காரியங்களாக இருப்பதினால் ஒரு மனிதனை ஆவிக்குரியவன் என்று சொல்லிவிட முடியாது. உண்மையான ஆவிக்குரியவனிடம் சில ஆழ்ந்த விருப்பங்கள் தோன்றியிருக்கும். அவை அவனது முழு வாழ்க்கையையும் ஆட்கொள்ளும். அவைகளை கீழே காண்போம்.

 

1. ஆவிக்குரிய மனிதன் மகிழ்ச்சியாக இருப்பதை விட பரிசுத்தமாய் இருப்பதையே விரும்புவான். ஆனால் இன்றைய கிறிஸ்தவ வட்டாரம் பரிசுத்தத்தை விட பரவசத்தையே நாடுகிறது.

 

2. ஆவிக்குரிய மனிதன் சிலுவை சுமத்தலை விரும்புவான். அனேக கிறிஸ்தவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் வரும் பாடுகள், வியாதிகளை சிலுவை என்று எண்ணுகின்றனர். கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்கும் இவைகள் வருகின்றனவே, பின் சிலுவை என்றால் என்ன? இயேசு கிறிஸ்துவின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதால் வரும் கூடுதல் பிரச்சனைகளை சிலுவை என்று ஆண்டவர் குறிப்பிடுகிறார். இந்த சிலுவையை கர்த்தர் நம்மில் திணிப்பதில்லை, மாறாக ஒரு ஆவிக்குரியவன் விளைவுகளை அறிந்தும் தானே சுயமாய் எடுத்து செல்வான்.

 

3. ஆவிக்குரிய மனிதன் பிறரது புகழ்ச்சியை விரும்பி நன்மை செய்யாமல் எதைச் செய்தாலும் அதைக் கர்த்தருக்கு என்று மனப்பூர்வமாய் செய்வான். 

 

4. ஆவிக்குரிய கிறிஸ்தவன் மற்றவர் உயர்த்தப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறான். அவனிடத்தில் பொறாமை இல்லை. தான் கவனிக்கப்படாமல் வேறு ஒருவர் கனப்படுத்தப்படும் போது விரக்தி அடைய மாட்டான்.

 

5. ஆவிக்குரியவர் உலகம் போற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு வாழாமல் தேவனுக்கு பிரயோஜனமுள்ள வாழ்வு வாழ பிரயாசப்படுவான்.

மேற்கண்டவை ஒரு ஆவிக்குரிய கிறிஸ்தவர் ஏதோ முயற்சி செய்து சுய பலத்தால் செய்பவை அல்ல, பரிசுத்த ஆவியானவர் அவனுக்குள் நடத்தும் கிரியையே ஆகும்.

- A. W டோசர் 

 

ஜெபக்குறிப்பு:

நம்முடைய வளாகத்தில் இயங்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நபர்கள் தேவனின் அன்பை ருசிக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)