Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 28-03.2023

இன்றைய தியானம்(Tamil) 28-03.2023

 

ஏரோதியாள்

 

‘’அவனுடைய சிரசை ஒரு தாலத்திலே கொண்டுவந்து சிறு பெண்ணுக்குக் கொடுத்தார்கள்; அவள் அதைத் தன் தாயினிடத்தில் கொண்டுபோனாள்.’’ - மத்தேயு14:11

 

நாம் பின்பற்ற தகாத முன்மாதிரிதான் ஏரோதியாள். ஏரோதியாளின் வாழ்க்கை எந்த விதத்திலும் பின்பற்றத்தகாத வாழ்க்கை. தாயைப் போல் பிள்ளை நூலைப் போல் சேலை என்று ஒரு பழமொழி உண்டு. அதன்படி ஏரோதியாளின் மகள் அவளைப் போலவே கடின இருதயம் கொண்டவளாகக் காணப்பட்டாள். அவளது பெயர் சலோமி என்றும், அவளுக்கு அப்போது ஏறத்தாழ 14 வயதிருக்கலாம் என்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர் ப்ளேவிளஸ் ஜோசிபஸ் கூறுகிறார்.

 

இத்தனை வயதுள்ள மகள் தன் தாயின் ஆலோசனைக்கு மறுப்புத் தெரிவித்திருக்கலாம். மாறாக அந்தப் பெண்ணும் தாயைப் போலவே கொடூர குணம் கொண்டவளாக மாறுவதற்கு ஏரோதியாளின் வாழ்க்கையே காரணமாகி விட்டது. ஏனெனில் அப்படிப்பட்ட சூழலிலே வளர்க்கப்பட்டதால் தவறு என்பதே தெரியாமற்போயிற்று. பயமில்லாமல் துணிச்சலும் கோபமும் பெருகுகிறது. அவள் தன் நடனத்துக்குப் பரிசாக தாயின் ஏவுதலின்படி யோவான்ஸ்நானனின் தலையைக் கேட்டாள். தாலத்திலே வைத்து தன்னிடம் தரப்பட்ட யோவான்ஸ்நானனின் இரத்தம் சொட்டும் தலையை எவ்வித அச்சமுமின்றிப் பெற்றுக் கொண்டு தாயிடம் சேர்க்கிறாள். ஒருவரது ஒழுக்கமற்ற வாழ்க்கை அவர்களை மட்டுமல்ல, அவர்களது சந்ததியையே பாதிக்கும். ‘’அடிக்கடி கடிந்து கொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்’’ (நீதி 29:1) என்ற வேத வாக்கிற்கேற்ப ஏரோதியாளின் இறுதிக்காலம் அமைந்தது. ஜோசிபஸின் ஆய்வின்படி அவள் தெற்கு பிரான்சிலுள்ள வியன்னாவிற்கு நாடு கடத்தப்பட்டு மரித்தாள்.

 

நம்முடைய வாழ்க்கையை நாம் சீர்தூக்கிப் பார்ப்போம். ஏரோதியாளின் வாழ்வைப் போல துணிகர பாவமும் பழிவாங்கும் செயலும் உண்டா? அல்லது பவுலைப் போல ‘’என்னைப் பின்பற்றுங்கள்’’ என்று தைரியமாக சொல்ல முடியுமா? நாம் உலகிற்கு ஒளி வீசுகிறவர்களாக வாழாவிட்டாலும் நம் குடும்பத்திற்கு நம் சந்ததிக்கு ஒளிவீசுகிறவர்களாக நம்மை மாற்றுவோம். பிறர் பின்பற்றும் வாழ்க்கை வாழ வாஞ்சிப்போம். தேவன் நமக்கு உதவி செய்வார்.

- Mrs. பேபி காமராஜ்

 

ஜெபக்குறிப்பு:

ஆந்திரா, ஒடிஸாவில் நடைபெறும் Day care centre ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.  

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)