Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 26-03.2023 (Kids Special)

இன்றைய தியானம்(Tamil) 26-03.2023 (Kids Special)

 

DON’T ADDICT

 

‘’…(இயேசு) குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்’’ - யோவான் 8:36  

 

ஒரு காட்டில் துறவி ஒருவர் ஒரு குடிசையில் வாழ்ந்து வந்தார். துறவி-ன்னா யாருன்னுதானே கேக்குறீங்க. உலக வாழ்க்கையை வெறுத்து திருமணம் செய்யாமல் இறைவனுக்காக சேவை செய்பவர்கள். அதேப்போல இந்த துறவியும் தான் இருக்கிற இடத்தையும், தன்னையும் சுத்தமாக வைத்துக் கொண்டு, காட்டிலுள்ள பழங்களையும், கிழங்குகளையும் தன் உணவாகக் கொண்டு இறைவனைப் பற்றி மட்டும் தியானம் செய்து வந்தார். தன்னை பார்க்க வருகிறவர்களுக்கு நல்ல ஆலோசனை கொடுத்து, பிரார்த்தனை செய்து வந்தார். இதனை அறிந்து அநேகர் வர ஆரம்பித்தனர். வருகிற எல்லோரும் பழங்கள், முந்திரி, பாதாம் என்று இன்னும் நல்ல உணவுப் பொருட்களை கொண்டு வந்து கொடுத்தார்கள். தேவைக்கு மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவர்களுக்கு கொடுக்காமல் வீடு முழுவதும் சேமித்து வைத்தார். சுத்தமாக இருந்த வீட்டில் எலி வர ஆரம்பித்தது. துறவியைப் பார்க்க வந்த நண்பரிடம் எலித் தொல்லை தாங்க முடியவில்லை என்றார். உடனே பூனை ஒன்றைக் கொண்டு வந்து விட்டார். எலித் தொல்லை போனதும் பூனைக்கு ஆகாரம் இல்லை என்று கண்ட நண்பர் பசு மாடு ஒன்றை வாங்கி வந்து விட்டார். பசு மாடு என்ன கொடுக்கும்? ஆமா பால் கொடுக்கும். அது பூனைக்கும் துறவிக்கும் தாராளமாய் இருந்தது. ஆனால் மாட்டுச்சாணம் துர்நாற்றம் வீசியது. அதனால் கொசு, பூச்சிகள் அதிகமானதால் துறவியால் நிம்மதியாக தூங்கக்கூட முடியவில்லை. மாட்டையும், பூனையையும் கவனிப்பதே பெரிய பாடாகிவிட்டது. 

 

இறைவனின் தியானம் இல்லாமல் போனது. இவரைப் பார்க்க வருகிற மக்கள் கூட்டமும் குறைந்தது. துறவி சிந்திக்க ஆரம்பித்தார். அளவோடு சாப்பிடும்போது நன்றாக இருந்தேனே! பேராசைக்கு இடம் கொடுத்து, உணவுக்கு அடிமையாகி விட்டேனே! இதனால் இந்த இடமும் உடலும் என் ஆன்மாவும் அசுத்தமாகிவிட்டதே என்பதை உணர்ந்தார். பசுமாடு, பூனை இரண்டையும் நண்பரிடம் ஒப்படைத்து விட்டு, வீட்டை சுத்தம் செய்து தேவையில்லாதவைகளை அகற்றிவிட்டு இனி இறைவனைத் தவிர வேறெதற்கும் நான் அடிமை இல்லை என்று தியானம் செய்ய ஆரம்பித்தார். அநேக மக்கள் அவர் ஆலோசனைக்காக காத்திருந்தார்கள்.

 

என்ன குட்டிச் செல்லங்களே! கதையை கேட்டீங்களா. உங்களுக்கும் செல்போன், டிவி, லேப்டாப், கம்ப்யூட்டர் இவைகளை தாராளமாய் யூஸ் பண்ண கிடைத்தாலும், ஒரு லிமிட்டாக இருக்க வேண்டும். தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தால் கண்கள் பாதிக்கப்பட்டு, மனநிலை பாதிக்கப்பட்டு எதிர்காலமே பாதிக்கப்படுகின்றது. அந்தத் துறவி எப்படி தன் அடிமைத்தனத்தை உணர்ந்து சரி செய்து கொண்டாரோ நீங்களும் எதற்கு அடிமையாய் இருக்கிறீர்களோ அதை விட்டுவிட பிரயாசப்பட வேண்டும். ஆண்டவர் உங்களுக்கு உதவி செய்வார். அவர் கரத்தில் உங்களைக் கொடுத்தால் நிச்சயம் விடுதலை உண்டு. ரெடி தானே.

- Mrs. அன்பு ஜோதி ஸ்டாலின்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)