Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 29-01.2023 (Kids Special)

இன்றைய தியானம்(Tamil) 29-01.2023 (Kids Special)

 

பள்ளி ஊழியம்

 

“உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன், உமது வசனத்தை மறவேன்” – சங்கீதம் 119:16 

 

“Note எடுத்து, Test எழுதுங்க” என்று சொல்லிக்கொண்டே Class-க்குள் நுழைந்தார் English sir. Please sir நாளைக்கு test வைங்க Sir என்று மாணவர்கள் ஒரே மாதிரி சொன்னதைக் கேட்டதும் Ok..Ok..Book எடுத்து படிக்க ஆரம்பிங்க. இனி No Excuse என்று Sir சொன்னார். நல்ல வேளை தப்பித்தோம் என்று நினைத்து படிக்காத மாணவர்கள் படிக்க ஆரம்பித்தார்கள். என்ன குட்டீஸ் test- ன்னா உங்களுக்கும் பயமா? Daily Home Work பண்ணிட்டா பயப்படத் தேவையில்லை. அப்படித்தானே குட்டீஸ்.

 

அந்த School–இல் Lunch time-ல் செல்வி அக்கா வேதபாட வகுப்பு நடத்த வருவாங்க. பாடல், கதை, மேஜிக், வசனம் எல்லாம் Super–ரா சொல்லித் தருவாங்க. இது தனலெட்சுமிக்கு பிடிக்காது. இயேசு என்ன பெரிய ஆளாக்கும் என்று கிண்டலடிப்பா, அக்கா சொல்லிக் கொடுப்பதைக் கேட்காம ரொம்ப சுட்டித்தனம் செய்வாள். பக்கத்திலுள்ளவர்களையும் கவனிக்க விட மாட்டாள். ஒவ்வொரு முறையும் இப்படி செய்கிறாளே, என்று செல்வி அக்காவுக்கு வருத்தமாக இருந்தாலும் பொறுமையாக நடத்தி முடிச்சாங்க. அக்கா சொல்லித் தந்த வசனத்தை யார் சொல்லப் போறீங்க என்று கேட்டதும். அக்கா நான் சொல்றேன்...நான்...நான்..என்று வரிசையாக சொல்ல ஆரம்பித்தார்கள். அருண் எழுந்து வசனம் சொன்னதும் எல்லாரும் ஜோரா கைதட்டினார்கள். எதுக்கு தெரியுமா? எப்பொழுதும் திக்கி, திக்கி பேசுவதற்கே கஷ்டப்படுகின்ற அருண் சரளமாக வசனம் சொன்னது எல்லாரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடு மட்டுமல்ல ஆசையாய் வசனம் படிக்கவும் ஏதுவாக இருந்தது. வேத வசனம் சாதாரண வார்த்தை கிடையாது அதில் உயிர் இருக்கிறது. அற்புதம் செய்யும் இயேசுகிறிஸ்துவும் வார்த்தையாய் உங்களுக்குள் கிரியை செய்வார். இதனால் எல்லோரும் வசனத்தை மனப்பாடம் செய்ய வேண்டும் என்று செல்வி அக்கா சொன்னதும், Ok அக்கா என்று குட்டீஸ் எல்லோரும் சத்தமாக கத்தினார்கள். சேட்டை பண்ணிக் கொண்டிருந்தாளே தனலெட்சுமி, அவ என்ன செய்தாள் என்று தானே கேட்கிறீங்க. அவளும் அமைதியாக தலையசைத்தாள். நானும் வசனத்தை மனப்பாடம் செய்வேன் என்பதைப் போலிருந்தது. தனலெட்சுமியின் மாற்றம் செல்வி அக்காவுக்கு மிகுந்த சந்தோஷத்தை தந்தது. அன்றைய School Mission ஊழியம் மிகவும் சிறப்பாக இருந்ததற்கு இயேசப்பாவுக்கு நன்றி சொன்னாங்க.

- Mrs. ஜீவா விஜய்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)