இன்றைய தியானம்(Tamil) 27-01.2023
இன்றைய தியானம்(Tamil) 27-01.2023
11ம் மணி நேர ஊழியர்
“தம்முடைய சீஷர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்” - மத்தேயு 9:37
ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவர் தன்னுடைய அனுபவத்தை இப்படியாக பகிர்ந்து கொண்டார். பல நிறுவனங்களில் பல துறைகளில் நான் வேலை பார்த்ததுண்டு. ஒரு நிறுவனத்தின் மேல் அதிகாரி என்னை கோபமான முகத்துடன் பேசி வேலை வாங்குவார். ஆனால் எப்படியோ அந்த மாத கடைசியில் சம்பளம் வருவதை நினைத்து என் மனதை தேற்றிக் கொண்டு வேலை செய்கிறேன். அதிலும் வேடிக்கையாக என்ன சொல்வார் என்றால், 50 சதவீத சம்பளம் வேலை செய்வதற்கும், 50 சதவீதம் திட்டு வாங்குவதற்கும் என்று கூறுவார். இது நமக்கு வேடிக்கையாக இருந்தாலும் ஒரு கடினமான மனநிலையோடுதான் அவர் அந்த கம்பெனியில் வேலை செய்கிறார்.
இன்றைய வேத பகுதியில் நம்முடைய பரம தகப்பன் தனது தோட்டத்தில் வேலைக்கு வந்தவர்களை குறித்தும் அவர்கள் பெற்றுக் கொண்ட சம்பளத்தை குறித்தும் நாம் பார்ப்போமானால் பெரிய ஆச்சரியமாக இருக்கிறது. அது என்னவென்றால் தனியார் நிறுவனத்தில் குறித்த நேரத்தில் குறிப்பிட்ட சம்பளத்திற்கு நாம் வேலை செய்கிறோம். ஆனால் இயேசப்பாவின் திராட்சத்தோட்டத்தில் அனைவருக்கும் ஒரே சம்பளம். ஆனால் நேரமோ வித்தியாசப்படுகிறது. தனியார் கம்பெனியில் நாம் வேலை தேடி செல்கிறோம். ஆனால் ஆண்டவருடைய திராட்சத் தோட்டத்தில் அவர் நம்மிடத்தில் வந்து கெஞ்சி நிற்கிறார்.
பிரியமானவர்களே! நாம் இந்த உலகில் காரியங்களை எதிர்மறையாகவே செய்து பழகி விட்டோம். பிசாசானவன் உண்மையையும் பொய்யையும் கலந்து நம்மை மாற்றி விட்டான். அது எப்படியென்றால், அழைப்பே இல்லாத தனியார் நிறுவனத்தில் நாம் விண்ணப்பித்து அதிலே வேலை செய்வதற்கு தீவிரமாக ஓடுகிறோம். இது ஒரு பக்கம் இருக்க, தன் திராட்சத் தோட்டத்தின் வேலைக்காக கையேந்தி நிற்கும் இயேசுவை நாம் கண்டுகொள்ளாமலே விட்டு விடுகிறோம். என்னை விட்டு தூரம் போய் மாயையைப் பின்பற்றி வீணராய் போகிறதுக்கு என்னிடத்தில் என்ன குறையை கண்டார்கள் என்று இயேசு அங்கலாய்க்கிறார். இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயத்தை கடினப்படுத்தாதேயுங்கள். இயேசுவின் திராட்சத் தோட்டத்தில் கடைசி ஒரு மணி நேர வேளையிலும் ஆட்களை அழைக்கிறார். எமது இயக்கத்தின் மூலம் ஒரு மணி நேரமாவது ஊழியம் செய்ய அர்ப்பணிப்போருக்கு 11ம் மணி நேர ஊழியர் என்ற திட்டத்தின் கீழ், அவர்களை பகுதி நேரமாக ஊழியம் செய்ய உற்சாகப்படுத்துகிறோம். அவர்களுக்கு தேவையான கைப்பிரதி புதிய ஏற்பாடு இலவசமாக கொடுக்கிறோம். நீங்கள் இணைந்து செயல்பட முன்வருவீர்களா?
- Mrs. சரோஜா மோகன்தாஸ்
ஜெபக்குறிப்பு:
பசித்தோருக்கு உணவளிக்கும் திட்டத்தின் மூலம் சந்திக்கும் நபர்கள் இயேசுவின் அன்பை ருசிக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864