இன்றைய தியானம்(Tamil) 22-01.2023 (Kids Special)
இன்றைய தியானம்(Tamil) 22-01.2023 (Kids Special)
வெளிச்சம் கொடுங்கள்
“…மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.” - மத்தேயு 5: 16
Hello, குட்டி தம்பி தங்கச்சி, எல்லோரும் ஜாலியா, சந்தோஷமாயிருக்கிறீங்களா, குட்டீஸ் நீங்க வெளிச்சமா இருக்கும்போது பயப்படுவீங்களா, இருட்டா இருக்கும்போது பயப்படுவீங்களா? Ok Correctடா சொன்னீங்க. இருட்ட கண்டாதான் எல்லோருக்கும் பயம் வரும். இப்படி இருட்டைக் கண்டு பயப்படுகிற நம்மள பார்த்துதான் இயேசப்பா சொல்றாங்க, நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள் என்று! அது எப்படி வெளிச்சமா இருக்க முடியுமென்று நினைக்கிறீர்களா, இந்த கதையைக் கேட்டு தெரிஞ்சுக்குவோம் வாங்க!
ஒரு ராஜாவிற்கு மூன்று ஆண் பிள்ளைகள் இருந்தார்கள். அவருக்கு வயதாகி விடவே அவரது குமாரர்களில் ஒருவரை இராஜாவாக்க முடிவு செய்தார் ஆனால் அந்த மூவரில் யார் அறிவாளி? யார் புத்திசாலியாக இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் பதவி என்று எண்ணி, அவர்கள் மூன்று பேரையும் அழைத்து அவர்களுக்கு அந்த ராஜ அரமணைக்குள் தனித்தனியே வெறுமையான பெரிய அறைகளையும், கொஞ்ச பணமும் கொடுத்து இதைக் கொண்டு இந்த அறைகளை எதைக்கொண்டு வேண்டுமானாலும் நிரப்புங்கள். ஒரு வாரம் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். ஒரு வாரமும் ஆகிவிட்டது.
இராஜா தனது பிள்ளைகளுடைய அறைகளைப் பார்த்து விட்டு வருவோம் என்று நினைத்து தனது பிரதானிகளையும் அழைத்துக்கொண்டு தனது மூத்தமகன் அறைக்குச் சென்று கதவைத் திறந்தார். பார்த்தால் இருளடைந்து உள்ளேயிருந்து எலிகள் அங்கும் இங்கும் ஓடித்திரிந்தது. வைக்கோலால் அந்த அறை முழுவதையும் நிரப்பியிருந்தான். இரண்டாவது மகன் அறைக்குச் சென்று கதவைத் திறந்தார். அங்கும் இருள்! பஞ்சு மூட்டைகளால் தனது அறையை நிரப்பியிருந்தான். மூத்த பிள்ளைகளே இப்படியிருக்கிறார்கள், ஒரு இராஜ அரமணைக்குள் எதை வைக்க வேண்டுமென்று கூடத் தெரியவில்லை. கடைசிப் பிள்ளை என்னத்தை வைத்து அடைத்திருக்கிறானோ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே அவன் அறையைத் திறந்தார். திறந்தவருக்கு ஒரே அதிர்ச்சி மற்றும் மகிழ்ச்சி! திறந்துவுடன் பளிச்சென்று வெளிச்சம் முகத்தில் பட்டது. உள்ளே பார்த்தால் அறை முழுவதும் வெளிச்சம். அந்த கொஞ்சப் பணத்தில் நல்ல விளக்கு ஒன்றை வாங்கி ஏற்றி வைத்தான். அறையை வெளிச்சத்தால் நிரப்பி இருந்தான். இராஜாவுக்கு சொல்ல முடியாத மகிழ்ச்சி. இவனுக்குத்தான் இராஜாவாக தகுதி இருக்கிறது என்று சொல்லி கடைசிப் பையனை இராஜாவாக அபிஷேகம் பண்ணினார்.
தம்பி, தங்கச்சி நாமும் பாவத்திலேயே இருந்தோமானால் நம்ம இருதயமும் இப்படித்தான் இருளடைந்து காணப்படும். பாவத்தை விட்டு வெளியே வரும் போது தான் நமது இருதயம் வெளிச்சமாய் இருக்கும். இயேசப்பாவும் வந்து தங்க முடியும். அது மாத்திரம் அல்ல மற்றவர்களுக்கு நன்மை செய்து, இருளடைந்த நம்ம தேசத்திற்கும் நாம தான் வெளிச்சம் கொடுக்கணும். அப்பத்தான் இயேசப்பா வரும் போது நமக்கு வாடாத கிரீடத்தை சூட்டுவார்.
- Mrs. சாராள் சுபாஷ்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864