இன்றைய தியானம்(Tamil) 20-01.2023
இன்றைய தியானம்(Tamil) 20-01.2023
எழுப்புதல் விரும்புவோர் முகாம்
“கடைசிநாட்களில் நான் மாம்சமானயாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்... உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்” -அப். 2:17
தேசத்தின் எழுப்புதலை வாஞ்சிக்கிறவர்களா நீங்கள்? அப்படி என்றால் இந்த செய்தி உங்களுக்காகத்தான். நான் எழுப்புதலை வாஞ்சித்தால் அது முதலாவது என்னிடத்தில் இருந்துதான் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று எல்லோரும் அறிந்ததே. அப்படித்தான் ரேண்டி ரிகாப்ஸ்ட் என்ற ஊழியரும் ஜெபித்தார். அவருக்குள் இருந்த எழுப்புதல் தீ அவருடைய மனைவிக்குள்ளும் பற்றிப் பிடித்தது. பின்பு அவருடைய மனைவியும், அவரும் இணைந்து தங்கள் தேசத்தின் எழுப்புதலுக்காக 12 வார உபவாச ஜெபத்தை நியமித்து சபையாய் ஜெபித்து வந்தனர். இதில் C.T.டவுண்ஸ்டன் என்ற சுவிசேஷகர் குடும்பமாக அழைக்கப்பட்டிருந்தார். லேக் உட் என்ற இடத்தில் நான்கு வழிச்சாலையில் ஒரு பெரிய கூடாரம் அமைத்து ஜெபித்து வந்தனர். இந்த ஜெபக்கூடாரத்தில் இரவு நேரத்தில் மட்டும் 5000 வாலிபர்கள் இணைந்து எழுப்புதலை வாஞ்சித்து ஜெபித்து வருகின்றனர்.
வேதத்திலும் கூட அப்.2 ம் அதிகாரத்தில் “பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது அவர்கள் எல்லோரும் ஓரிடத்தில் வந்திருந்தார்கள், அவர்கள் எல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள் என்று வாசிக்கிறோம்” அது போல் அப்.4ம் அதிகாரத்தில் விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமும் உள்ளவர்களாய் அவர்கள் ஜெபம் பண்ணின போது அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாம் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு தேவ வசனத்தை தைரியமாய் சொன்னார்கள் என்று வாசிக்கிறோம். நாம் சிறு சிறு கூட்டமாய் கூடி ஒருமனதாய், ஒரே இருதயம் உள்ளவர்களாய் ஜெபிக்கும் போது நம்மை பார்ப்பவர்களுக்குள்ளாகவும் எழுப்புதலின் தீ பற்றிப் பிடிப்பது அதிக நிச்சயம்.
தேவனுடைய பெரிதான கிருபையினால் கடந்த நவம்பர் மாதத்திலே தமிழ்நாட்டில் 27 இடங்களில் எழுப்புதல் விரும்புவோர் முகாமை நடத்த ஆண்டவர் உதவி செய்தார். அதன் மூலம் ஆயிரக்கணக்கான ஜனங்களை சந்தித்து ஜெபக்குழுக்களின் முக்கியத்துவத்தை அறிவித்தோம். நீங்கள் எங்களுடன் இணைந்து ஜெபிக்க, எழுப்புதலை தேசத்தில் காண தோள் கொடுப்பீர்களா? பத்துப்பேர் கொண்ட ஜெபக்குழு பத்து பேராகவே இருந்தால் பரலோகத்திற்கு என்ன லாபம் என்று சிந்தித்துப்பாருங்கள். 10 பேர் கொண்ட ஜெபக்குழு 10 ஜெபக்குழுவாக பிரித்து 100 பேர் கொண்ட ஜெபக்குழுவாக மாற வேண்டும். அதுவே எழுப்புதலின் அடையாளம். இன்னாளிலிருந்தே நாம் அதை குறிக்கோளாக எடுத்து செயல்படுவோம்.
நினைவிற்கு: தேசத்தின் எழுப்புதல் வேறு எங்கும் இல்லை, அது நம்மிடத்தில் இருந்துதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- Mrs. சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு
திருச்சியில் மே 1ல் நடைபெறும் ஒரு லட்சம்பேர் பங்குபெறும் வாலிபர் முகாமிற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864