Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 17-01.2023

இன்றைய தியானம்(Tamil) 17-01.2023

 

மருத்துவமனை ஊழியம்

 

“லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து…” – லூக்கா 16-20

 

இயேசுவை அறியாத சேகர் என்ற வாலிபன் கேன்சர் வியாதியினால் பாதிக்கப்பட்டு, தன் குடும்பத்தினரால் கைவிடப்பட்டு மருத்துவமனையில் இருந்தான். Doctor –ஆல் மரண தேதியும் முன் குறிக்கப்பட்டது. அவன் மிகவும் மனமுடைந்து காணப்பட்டான். இந்நிலையில் மருத்துவமனை ஊழியத்திற்கு சென்ற சில நபர்கள் சேகரிடம் இயேசு உனக்கு சுகம் தருவார் கவலைப்படாதே என்று ஆறுதல் கூறி விசுவாசத்தோடு ஜெபித்துவிட்டு சென்றார்கள். சேகரும் கண்ணீரோடு தன்னை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தான். அன்றிலிருந்து அவனுக்குள் மாற்றம் வர ஆரம்பித்தது, ஒரு சில நாட்களில் பரிபூரண சுகமும் ஆகிவிட்டான். இதைக்கண்டு டாக்டரும், அவன் படுக்கைக்கு அருகில் இருந்த அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். தற்போது திருமணமாகி தனது கிராமத்தில் சாட்சியாய் வாழ்ந்து, இயேசுவுக்கென்று முழுநேரமாக அவருடைய பணியை செய்து வருகிறார். 

 

அன்பான கிறிஸ்தவ நண்பர்களே, இவரைப் போலத்தான் இன்று ஏராளமான ஜனங்கள் பற்பல வியாதிகளோடு, என்னை விசாரிக்க, கவனிக்க, யாருமே இல்லையே, ஏன் எனக்கு இப்படிப்பட்ட கொடிய வியாதி, இதிலிருந்து எனக்கு ஒரு விடுதலை கிடைக்காதா? நான் இந்த வியாதியிலேயே மரித்து விடுவேனோ என்று மரண பயத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு யார் இயேசுவின் அன்பை அறிவிப்பது. நீங்கள் நினைக்கலாம் இப்படிப்பட்ட ஊழியத்தை ஊழியக்காரர்கள்தான் செய்ய முடியும் என்று! அவர்கள் ஜெபித்தால் தான் அற்புதங்கள் நடக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் வேதம் நமக்கு தெளிவாய் கூறுகிறது. மாற்கு 16: 17,18ல் விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன, என்று எழுதப்பட்டுள்ளதேயன்றி, ஊழியக்காரர்களால் நடக்கும் அடையாளங்கள் என்று கூறப்படவில்லை. அப்படியென்றால் இரட்சிக்கப்பட்ட, இயேசுவை விசுவாசிக்கிற உங்களைக் கொண்டுதான் இயேசு இப்படிப்பட்ட அற்புதங்களை செய்யப்போகிறார்.

 

பிரியமானவர்களே! இயேசுகிறிஸ்து ஒரு நாளில் நம்மைப் பார்த்து கேட்பார். நான் வியாதியோடு இருந்தேன் என்னை விசாரிக்கவில்லை என்று! அப்பொழுது அவரிடம் என்ன பதில் கூறுவீர்கள்? ஆகவே இப்புதிய ஆண்டில் ஒரு தீர்மானம் எடுப்பீர்களா? உங்கள் ஊருக்கு அருகாமையில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு சென்று அவருடைய பணியைத் தொடங்குவீர்களா? நீங்கள் விசுவாசத்துடன் செய்யும் ஜெபம் நிச்சயம் அற்புதங்களைக் கொண்டு வரும். உங்கள் மூலம் சேகர் போன்ற அநேகர் புதுவாழ்வு பெற முடியும். செயல்படுங்கள், தாமதம் வேண்டாம் உங்கள் மூலமாய் அநேகர் சுகம் பெற்று வீடு திரும்பட்டும்.

 

நினைவிற்கு: இயேசுவின் தழும்புகளால் நீங்கள் குணமானீர்கள், ஆகவே வியாதியில் வருந்தும் மக்களுக்காய் ஜெபிக்க நினைவில் கொள்ளுங்கள்.

- Mrs. சாராள் சுபாஷ்

 

ஜெபக்குறிப்பு:

தினமும் நமது வளாகத்தில் நடைபெறும் சுகமளிக்கும் ஆராதனையில் பிரத்தியட்சமான அற்புத அடையாளங்கள் நிகழ ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)