இன்றைய தியானம்(Tamil) 15-01.2023 (Kids Special)
இன்றைய தியானம்(Tamil) 15-01.2023 (Kids Special)
ஞாயிறு பள்ளி ஊழியம்
“உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்.” - பிரசங்கி11:1
குட்டிப் பிள்ளைகளே, இன்றைக்கு ஒரு உண்மை சம்பவத்தை உங்களுக்கு சொல்லப்போறேன். கவனமா கேளுங்க... பசுமையான புல்வெளிகள், அழகான மலை. அந்த மலை மேல் சிறிய கிராமம்...! அங்கு School, Hospital எதுவும் கிடையாது. பஸ் வசதியும் கிடையாது. என்ன வேலை என்றாலும் 10கி.மீ மலையிலிருந்து இறங்கி வரணும். எவ்வளவு கஷ்டம்! என்ன குட்டீஸ் நம்மை இயேசப்பா எவ்வளவு ஆசீர்வாதமாக வைத்திருக்கிறார். இந்த கிராமத்தில் சோமு என்ற குட்டித் தம்பி இருந்தான். அப்பா விறகு வெட்டப் போகும் போதெல்லாம் சோமு கூட போய் அப்பாவுக்கு உதவியாக விறகுகளை அடுக்கிக் கொடுப்பான். சாயங்காலம் வீட்டிற்கு வந்ததும் அம்மா காய்ச்சி வச்ச சாராயத்தை குடிப்பாங்க. குளிர் காலம் வந்து விட்டால் சுருட்டு பிடிப்பாங்க. அந்த கிராமத்தில் எல்லோரும் அப்படித்தான். இது தவறு என்று தெரியாம செய்து வந்தாங்க.
அந்த கிராமத்தில் டேவிட் என்ற அண்ணன் சுவிசேஷம் அறிவிக்க வந்தாங்க. அங்குள்ள நிலைமையைப் பார்த்து ரொம்ப வேதனைப்பட்டாங்க. சிறு பிள்ளைகள் கூட குடிப்பது, புகைப்பது, கெட்ட வார்த்தை பேசுவது, சுத்தமில்லாமல் இருப்பது, இதனை கண்ட டேவிட் அண்ணன் அங்கு ஞாயிறு பள்ளி நடத்தவும் ஆரம்பித்தார்கள். சோமு அந்த கிராமத்திலுள்ள சிறுபிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு வந்தான். சில மாதங்களுக்குள் பெரிய மாற்றம் உண்டானது. குடிப்பதால் உடலுக்கு கேடு என்று சிறுபிள்ளைகள் பெற்றோருக்கு சொல்ல ஆரம்பித்தார்கள். இந்த மாற்றத்திற்கு யார் காரணம் என்று ஊர் தலைவர் கேட்க, மற்றவர்கள் எல்லாம் டேவிட் அண்ணனை அடிக்க வந்தார்கள். அந்த நேரம் சோமு அப்பாவிற்கு பாம்பு கடித்து வீட்டிற்கு தூக்கிக் கொண்டு வந்தார்கள். அடிக்க வந்த கூட்டம் சோமு வீட்டிற்கு அப்படியே திரும்பியது. 10 கி.மீ தூரமுள்ள ஆஸ்பத்திரிக்கு போவதற்குள் இவர் மரித்து விடுவார் என்று எல்லாரும் சொன்னார்கள். சோமு முழங்கால் போட்டு ஜெபித்தான். சிறிது நேரத்திற்கு பிறகு அப்பா எழுந்து உட்கார்ந்தார். மரித்து விடுவார் என்று நினைத்துக் கொண்டிருந்த கிராம மக்கள் ஆச்சரியப்பட்டனர், சோமுவின் ஜெபத்தால் தான் இயற்கைக்கு மேற்பட்ட சுகம் கிடைத்தது என கிராம மக்கள் நம்பினர். டேவிட் அண்ணன் ஞாயிறு பள்ளியில் நம்பிக்கையோடு எதைக் கேட்டாலும் இயேசு தருவார் என்று சொன்னது பிள்ளைகள் மனதில் கிரியை செய்ததை எண்ணி மகிழ்ந்தார். பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை ஞாயிறு பள்ளிக்கு தவறாமல் அனுப்பி வைத்தனர்.
என்ன குட்டீஸ், ஞாயிறு பள்ளிக்கு போறீங்களா? உங்க Friends-யையும் அழைத்து செல்லுங்க. நல்ல காரியங்களை கற்றுக் கொடுப்பாங்க. உங்க வாழ்க்கைக்கு வழிகாட்டியா Jesus இருப்பாங்க. Ok Bye…
- Mrs. அன்பு ஜோதி ஸ்டாலின்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864