Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 14-01.2023

இன்றைய தியானம்(Tamil) 14-01.2023

 

ஒரு லட்சம் கிராமங்கள் 

 

“பின்பு, அவர் பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பிரயாணம்பண்ணி, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்துவந்தார்...” - லூக்கா: 8.1

 

1979 ஆம் ஆண்டு 16 வயது இளைஞன் ஒரு நாளைக்கு ஒரு மரக்கன்று நடத்தொடங்கினான். இம்முயற்சியின் மூலம் 15 கால்பந்து மைதானங்கள் அளவுக்கு பரந்து விரிந்த காடுகளை தனி ஒருவனாக உருவாக்கியுள்ளார். இவர் இந்தியாவின் ‘’வனமனிதன்’’ என்று அழைக்கப்படும் ஜாதவ் மொலாய் பயேங். 550 ஏக்கர் தரிசு நிலத்தை பிரம்மபுத்திராவில் பலவிதமான பறவைகள் மற்றும் விலங்குகளுடன் பசுமையான காடாக மாற்றினார், வெறுமனே மரங்களை நட்டு! ஆம், ஒரு தனி மனிதனால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டு பூமிக்கு நன்மை செய்யமுடியுமானால், எமது கிராம மிஷனெரி இயக்க குழுவினருக்கு தேவன் கொடுத்த தரிசனமான ஒரு லட்சம் கிராமங்களைக் கொடுப்பது எத்தனை எளிது. 

 

இந்தியாவில் சுமார் 6 லட்சம் கிராமங்கள் உள்ளது. அதில் கோடிக்கணக்கான ஆத்துமாக்கள் இன்னும் ஆண்டவரை அறியாமல் இருளில் உள்ளனர். அவர்கள் இயேசுவை அறிய தரிசனத்தோடு செயல்படும் எங்களோடு நீங்கள் இணைந்து கொள்ளலாம்.

 

“உங்களுக்கு எதிரேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள்” (மாற்கு1:12) என்ற இயேசுவின் கட்டளையை நாமும் நம் வாழ்வில் செயல்படுத்துவோம். சீஷர்கள் இயேசுவின் கட்டளையை ஏற்றுக்கொண்டு, புறப்பட்டுப்போய் கிராமங்கள்தோறும் திரிந்து, எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பிணியாளிகளைக் குணமாக்கினார்கள் என்று லூக்கா 9:6ல் வாசிக்கிறோம். நாமும் கிராமங்களை இயேசுவுக்கு சொந்தமாக மாற்ற நம்மால் இயன்றதை தனிமனிதனாக, குடும்பமாக, குழுவாக செய்வோம். கிராமங்கள் தேவனை அறியட்டும். அங்குள்ள கட்டுகள், பிசாசின் பிடிகள், வியாதிகள், வேதனைகள் அடியோடு அழிக்கப்படட்டும். எங்களுக்காகவும் ஜெபியுங்கள். நாம் இணைந்து கிராமங்களை கிறிஸ்துவுக்கு நேராய் வழிநடத்துவோம். சுவிசேஷத்திற்கு விரோதமாக எழும்புகிற சாத்தானின் அந்தகார வல்லமைகள் முறியடிக்கப்படவும், அரசியல் சட்டங்கள் அநுகூலமாக அமையவும், வசனம் செல்லும்படியான திறந்த வாசலை தேவன் நமக்கு கட்டளையிடவும் ஊக்கமாக ஜெபிப்போம், ஜெயம் பெறுவோம்.

 

நினைவிற்கு: காட்டில் மரங்களின் பெருக்கம் பறவைகளாலேயே, நாட்டில் ஆத்துமாக்களின் பெருக்கம் உங்களாலேயே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

- Mrs. ஐடா கிங்டேவிட்

 

ஜெபக்குறிப்பு:

பொங்கல் விடுமுறை நாட்களில் ஊழியர்களின் பிள்ளைகளுக்கென்று நடைபெறும் யோசுவாவே எழும்பு முகாமிற்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)