Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 10-01.2023

இன்றைய தியானம்(Tamil) 10-01.2023

 

கிறிஸ்துவின் போர் சேவகர்

 

“என் தேவனுடைய கரம் என்மேல் நன்மையாக இருக்கிறதாயும், ராஜா என்னோடே சொன்ன வார்த்தைகளையும் அவர்களுக்கு அறிவித்தேன்; அப்பொழுது அவர்கள் ‘எழுந்து கட்டுவோம்’ வாருங்கள் என்று சொல்லி, அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள்...’’ -நெகேமியா 2:18

 

நீரோ என்ற ரோமப் பேரரசின் கொடுங்கோல் ஆட்சியில் ஆதி திருச்சபை இருந்தது. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டனர். ஆனால் அவர்களோ ‘’அல்லேலூயா’’ என்ற கோரசை பாடிக் கர்த்தரை ஆராதித்தார்கள், அவர்கள் சரீரம் சேதப்பட்டதே ஒழிய, அவரகள் ஆத்துமா சேதப்படவில்லை. மற்றும் அவர்களுடைய முகங்கள் பிரகாசித்துக் கொண்டிருப்பதைக் கண்டு, “உங்கள் மகிழ்ச்சியின் இரகசியம் என்ன?’’ என்று பதட்டத்துடன் ராஜா கேட்டான். அதற்கு அவர்கள், ‘’இராஜாவே, நாங்கள் ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தரும், எங்கள் ஆத்தும நேசருமாகிய இயேசுகிறிஸ்துவின் பிரசன்னத்திற்கு செல்லுகிறோம்’’ என்று உரத்த சத்தத்துடன் கூறினார்கள். 

 

பரிசுத்த வேதாகமத்தில் பார்ப்போமானால் தானியேலும் அவரது நண்பர்களும் ராஜாவின் போஜனத்தினால் தன்னை தீட்டுப்படுத்தாமல் வைராக்கியம் கொண்டனர். ராஜா, தான் நிறுத்தின பொற்சிலையை வணங்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தபோது அதைக் கண்டு கொள்ளாமல் தேவனுக்காய் வைராக்கியமாய் நின்றார்கள். ராஜ கட்டளையை மீறி பலகணிகள் திறந்திருக்க தேவனை நோக்கி மூன்று வேளையும் வைராக்கியமாய் ஜெபித்தார் தானியேல். விளைவு தேசம் தேவனை அறிந்தது.

 

பிரியமானவர்களே! காலங்கள் உருண்டோடி கொண்டிருக்கின்றன. தேசமே இருளில் மூழ்கிக் கிடக்கிறது. நாம் சுயநலவாதிகளாய் இருப்போமானால் நமக்கு ஐயோ. ‘’யாரை நான் அனுப்புவேன் யார் நமது காரியமாய்ப் போவான்’’ என்று அறைகூவல் விடும் ஆண்டவருடைய சத்தத்துக்குச் செவிகொடுப்போம். நீங்கள் வசிக்கும் கிராமப் பகுதிகளில் சென்று உங்கள் நண்பர்களோடு இணைந்து ஊழியம் செய்யுங்கள். தேவைகளை தேவன் எப்படி சந்திக்கிறார் என்ற ஆச்சரியத்தைப் பொறுத்திருந்து பாருங்கள். ஊழியம் என்பது இவ்வளவு தானா என்று ஒருபக்கம்! ஊழியம் என்பது இத்தனை மேன்மையா என்று மறுபக்கம்! நமது இயக்கத்திலே வருடந்தோறும், வாலிபர்களை ஒன்றிணைத்து கிறிஸ்துவின் போர்ச் சேவகர் முகாம் ஒன்றை நடத்தி வருகிறோம். நீங்களும் கிறிஸ்துவின் போர்ச்சேவகராய் எழும்புவீர்களென்றால் தேசத்தை நிச்சயம் சுதந்தரிக்கலாம். 

நினைவிற்கு: எதிர்பார்ப்போடு களத்தில் நில்லுங்கள் அநேக போர்ச்சேவகர்கள் எழும்ப கர்த்தர் உங்களை கருவியாக பயன்படுத்துவார் என்பதை நினைவில்

கொள்ளுங்கள்.

- Mrs. ஜெபக்கனி சேகர்

 

ஜெபக்குறிப்பு:

ஆந்திரா, ஒடிஸா மற்றும் சட்டீஸ்கரில் நடைபெறும் நம் பணித்தள ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)