Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 17-08-2022

இன்றைய தியானம்(Tamil) 17-08-2022

 

அனாதைக் குழந்தைகள் 

 

“திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.” – யாக்கோபு 1:27 

 

துருக்கி நாட்டைச் சேர்ந்த தன்னார்வ அலுவலர் வெளியிட்ட புகைப்படமானது அநேகருடைய கண்களில் கண்ணீரை வரவழைத்தது. பசி, பஞ்சம், வறட்சியின் உருவமாகக் காணப்படும் சோமாலியாவில் இந்த வருடத்திலும் ஒரு வேளை உணவுக்காக மக்கள் ஆங்காங்கே அலைந்து திரிகின்றதை நாம் வேதனையோடு பார்க்க முடிகிறது. அரசு அமைத்துக் கொடுத்திருக்கும் முகாம்களில் ரேஷன் முறையில் குறிப்பிட அளவு உணவு வழங்கப்படுகிறது. இது தவிர பல வெளிநாட்டுத் தன்னார்வ அமைப்புகளும் சோமாலியாவில் உதவி செய்து வருகின்றன. இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று உணவுப் பொட்டலத்தைக் கொண்டு வந்தவரைப் பார்த்து வெகுநேரம் அவர் அருகில் அமர்ந்து அழுது கொண்டிருந்தது. பசியின் அகோரப் பிடியில் ஏற்கனவே தன்னுடைய தகப்பனையும் தாயையும் இழந்திருந்த அக்குழந்தை தான் உயிர் வாழ்வதற்கு ஒரு நம்பிக்கை கிடைத்ததை எண்ணி வேதனையோடு அழுது கொண்டிருந்தது. சோமாலியாவில் இதைப் போன்று லட்சக்கணக்கான அனாதைக் குழந்தைகள் இன்றும் காணப்படுகின்றனர். 

 

“மிகவும் சிறியவராகிய என் சகோதரர்களான இவர்களில் ஒருவருக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள், என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று ஆண்டவர் இயேசு சுவிசேஷத்தில் சொன்னதை வாசிக்கின்றோம். மேலே வாசித்த சம்பவத்தில் உணவுக்காக காத்திருக்கும் மக்களுக்கு மட்டுமல்ல, தாயையும் தகப்பனையும் இழந்து தவிக்கும் அநேக ஆதரவற்ற குழந்தைகளை ஆதரிக்கும்படியாகவும் அனேக தன்னார்வ அமைப்புகள் செயல்படுவதை நாம் வாசித்தறிய முடிகிறது. இந்த நற்கிரியைகளை கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்று ஆண்டவர் நம்மிடத்தில் எதிர்பார்க்கின்றார் . ரஷ்யாவில் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பினால் (மொத்த ஜனங்கள் 80 லட்சம் பேர் ) லட்சக்கணக்கான குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்து அனாதைகளாகியுள்ளனர். சோமாலியா போன்ற ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் பஞ்சம் தலைவிரித்தாடி அதன் மூலம் அனாதைகளான குழந்தைகள் எண்ணிக்கைக்கு கணக்கில் அடங்கா. இதன் மூலம் பல இடங்களில் சூழ்நிலைகள் நிமித்தம் சிறுவயதில் பெற்றோரை இழந்து அனாதைகளாக்கப்படுகின்ற பிள்ளைகள் ஏராளம். “சிறுமைப்பட்டவன் மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்” என்று சங்கீத புத்தகத்தில் வாசிக்கின்றோம்.  

 

நம் கர்த்தருக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தி என்ன என்று சொல்லப்பட்டிருப்பதை மேலே நாம் வாசித்த வசனத்தில் கண்டோம். திக்கற்ற பிள்ளைகள், எளியோர், கைவிடப்பட்டோர் மீது நாம் அதிக கரிசனை கொள்ளும்படி பரிசுத்த வேதாகமம் நம்மை அறிவுறுத்துகிறது. சமுதாயத்தில் அனாதைக் குழந்தைகளைக் காணும் போது அவர்களை குறித்த அதிகக் கரிசனைகளும் தயவுகளும் நமக்குக் காணப்பட வேண்டும். அதற்கு ஆண்டவர் நமக்கு உதவி செய்வாராக. 

- P..ஜேக்கப் சங்கர் 

 

ஜெபக்குறிப்பு:

திங்கள் தோறும் இவ்விதழில் வெளிவரும் வாலிபப் பெண்பிள்ளைகளுக்கான சிறப்புத் தியானத்தின் மூலம் வாலிபர்கள் தொடப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)